வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்திற்கு பாதிப்பா? - Tamil News | low pressure formed in bay of bengal very heavy rainfall excepted in nagapattinam tanjore cuddalore districts imd reports | TV9 Tamil

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்திற்கு பாதிப்பா?

Published: 

23 Nov 2024 13:55 PM

Tamilnadu Weather : தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.

1 / 5தெற்கு அந்தமான  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் கடந்த 21ஆம் தேதி காலை 8.30 மணியளவில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவானது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 25ஆம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் கடந்த 21ஆம் தேதி காலை 8.30 மணியளவில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவானது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 25ஆம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

2 / 5

அதன்பிறகு, இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழக-இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், இதுவரை அடைமழை பெய்யவில்லை.

3 / 5

கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த இரு தினங்களாக ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

4 / 5

இந்த சூழலில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 / 5

வரும் 25ஆம் தேதி 27ஆம் தேதி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

உடலுக்கு தினமும் ஏன் புரதம் முக்கியம்..?
நீங்கள் ஒரு விஷயத்தில் வெற்றி பெறாமல் இருக்க காரணம்!
உலகின் பாரம்பரியமான சந்தைகள் பற்றி தெரிஞ்சுகோங்க!
சரும வறட்சிக்கு சிகிச்சை அளிக்கும் கற்றாழை ஜெல்..!