5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்.. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. எந்நெத்த மாவட்டம்?

Tamil Nadu Weather Update: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதுவும் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 15 Dec 2024 06:41 AM
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதுவும் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழைக்காலாம்  இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.  தொடக்க நாட்களில் சரிவர மழை பெய்யவில்லை. ஆனால் நவம்பர் இறுதிப்பகுதியில் இருந்து தான் ஓரளவு மழை  பெய்யத் தொடங்கியது.

1 / 5
இந்த நிலையில், 2 வாரங்களுக்கு முன்னர் வங்கக் கடலில்  ஃபெங்கல் புயல் தோன்றியது. இதன் விளைவாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. இங்கு  50 செ.மீ மேல் மழை கொட்டியது. இதனால் அப்பகுதிகள் முழுவதும் கடுமையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  இந்த புயல் கடந்து சென்ற நிலையில், வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

2 / 5
இதுவும் தமிழக கரையை நோக்கி வந்தது. இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள்  வேகமாக நிரம்பின. குறிப்பாக, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில்  தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்தது.  அதனால் தான்  இந்த பகுதிகளில் ஏராளமான நெற்பயிற்கள் தண்ணீரில் மூழ்கின.

3 / 5
மேலும்,  தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த  மழை பெய்தது.  இதனால் தாம்ரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தென்காசி மாவட்டத்தில் சில இடங்களில் குளங்களும் உடைந்தன.  இப்படிப்பட்ட நிலையில், வங்கக் கடலில் அந்தமான்  தீவுகளுக்கு அருகே காற்றில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

4 / 5
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை  தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது.  எனவே, டிசம்பர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கனமழை பெய்யும். குறிப்பாக 17ஆம் தேதி  மிக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.

5 / 5
Latest Stories