5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

Today Weather: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அந்தமான் கடல்பகுதியில் 5.8 கிமீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்கக் கடல் கிழக்கு பகுதியில் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Oct 2024 07:47 AM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை டிசம்பர் மாதம் வரை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்தில் கூட வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை மற்றும் ஆந்திரவை நோக்கி நகர்ந்தது.   இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதோடு மழையும் வெளுத்து வாங்கியது.

1 / 5
இப்படியான சூழலில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மத்திய அந்தமான் கடல்பகுதியில் 5.8 கிமீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கதால் மத்திய வங்கக் கடல் கிழக்கு பகுதியில் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

2 / 5
இது வடமேற்கு  திசையில் நகர்ந்து வரும் 23ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வறுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும்,  அரபிக்கடலிலும் விரைவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இது வடமேற்கு திசையில் நகர்த்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு காற்றுழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

3 / 5
அதன்படி, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 / 5
நாளை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்: நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 24ஆம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

5 / 5
Latest Stories