Dhoni Birthday: கார் முதல் காதல் வரை.. தோனி குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்! - Tamil News | M.S. Dhoni birthday celebration 10 interesting facts about Dhoni | TV9 Tamil

Dhoni Birthday: கார் முதல் காதல் வரை.. தோனி குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்!

Updated On: 

25 Sep 2024 09:09 AM

: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தோனி அவரது பிறந்த நாளை கொண்டாடும் வீடியோவை சாக்‌ஷி தோனி அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1 / 11கேப்டன்

கேப்டன் கூல், தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்றைய தினம் தனது 43 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

2 / 11

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சாதாரண குடும்பத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி பிறந்த மகேந்திர சிங் தோனி ரயில்வே துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

3 / 11

சாக்‌ஷியை காதலித்து வந்த தோனி பெற்றோரின் சம்மதத்துடன் 2010ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி டெஹ்ராடூனில் திருமணம் செய்துகொண்டனர்.

4 / 11

2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையும் கைப்பற்றியுள்ளார்.

5 / 11

2004 முதல் 2019 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் தோனி விளையாடி இருந்தார். 90 டெஸ்ட், 350 ஒருநாள் போட்டிகள், 98 டி20 போட்டிகளில் விளையாடி 17,266 ரன்கள் எடுத்துள்ளார்.

6 / 11

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன். இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் பட்டம் வென்றுள்ளார்

7 / 11

தோனிக்கு பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். தோனி தனது கேரேஜில் 100க்கும் மேற்பட்ட பைக்குகள் வைத்துள்ளார்.

8 / 11

ஆரம்பத்தில் கால்பந்து விளையாடி வந்த தோனி, கிரிக்கெட் மீது கவனத்தை செலுத்தி முதலில் விக்கெட் கீப்பராக பயிற்சியை மேற்கொண்டார். பிறகு பேட்டிங்கிலும் பயிற்சியை தொடங்கி உள்ளூர் போட்டிகளில் அதுவும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார்.

9 / 11

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்

10 / 11

சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன் பதவியை ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வழங்கினார்

11 / 11

ஹம்மர் ஹெச் 2, ஆடி க்யூ 7, மிட்சுபிஷி பஜேரோ எஸ் எஃப் எக்ஸ், லேண்ட் ரோவர் பிரிலேன்சர், மஹீந்திரா ஸ்கார்பியோ, ஃபெர்ராரி 599 ஜிடிஓ, ஜீப் கிராண்ட் செரோகி, டிராக்வாக், நிசான் ஜோங்கா, ரோல்ஸ் ராய்ஸ் என்று ஏராளமான கார்களை வைத்திருக்கிறார்.

Follow Us On
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் நியூ ஆல்பம்
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version