Highest Sale: அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்த மஹிந்திரா நிறுவனம்… - Tamil News | mahindra records highest ever sale in october 2024 for scoring 25 percent hike details in tamil | TV9 Tamil

Highest Sale: அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்த மஹிந்திரா நிறுவனம்…

Published: 

03 Nov 2024 08:55 AM

Mahindra's Highest Sale: மகேந்திரா கார் ராக்ஸ் அந்த நிறுவனத்தின் கூடுதல் மைலேஜ் தரக்கூடியதாகும். இது வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்று முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே மொத்தம் 1.67 லட்சம் முன்பதிவுகளை பெற்றது. மேலும் இந்த நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் அதன் அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

1 / 5இந்த

இந்த வருட அக்டோபர் மாதத்தில் மகேந்திரா நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது.‌ கடந்த மாதம் மட்டும் 54,504 SUV வாகனங்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் நவராத்திரியுடன் தொடங்கி தீபாவளியுடன் முடிந்தது. பல பண்டிகைகளை சந்தித்த அக்டோபர் மாதத்தில் வாகன சந்தைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே பண்டிகை காலங்களை ஒட்டி வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது.

2 / 5

மகேந்திராவின் SUV விற்பனையில் ஏற்பட்ட அதிகமான உயர்வினை கடந்த ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகமாக உள்ளது. மொத்த இந்திய வாகன உற்பத்தியும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 96,648 யூனிட்களை விற்பனை செய்து பதிவு செய்துள்ளது. இதில் வணிக வாகனங்கள் மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் அடங்கும். உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை 28,812 ஆகும்.

3 / 5

மகேந்திரா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவர் விஜய் நக்ரா கூறுகையில், "கடந்த அக்டோபரில் 54504 SUV வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு 25% வளர்ச்சியை எட்டியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தார்‌ ROXX 60 நிமிடங்களில் 1.7 லட்சம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த மாதம் அற்புதமாக தொடங்கியது. பண்டிகை காலத்தில் நேர்மறையாக அதன் வேகம் தொடர்ந்தது" என்று தெரிவித்தார்.

4 / 5

மகேந்திரா கார் ராக்ஸ் அந்த நிறுவனத்தின் கூடுதல் மைல்கள் ஆகும். இது வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்று முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே மொத்தம் 1.67 லட்சம் முன்பதிவுகளை பெற்றது. மேலும் இந்த நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் அதன் அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

5 / 5

அதிக எண்ணிக்கைகள் இடம் பெற்ற இந்திய கார் வரிசையில் தார், தார் ரோக்ஸ், ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ-என், பொலேரோ, பொலேரோ நியோ, எக்ஸ்யூவி700, எக்ஸ்யூவி400 மற்றும் எக்ஸ்யூவி 3XO ஆகியவை அடங்கும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்