Dzire 2024: பாதுகாப்பு அம்சத்திற்கு 5 ஸ்டார்.. கலக்கும் மாருதி சுஸுகியின் டிசையர்! - Tamil News | Maruti Suzuki dzire got 5 star rating from global NCAP for safety details in tamil | TV9 Tamil

Dzire 2024: பாதுகாப்பு அம்சத்திற்கு 5 ஸ்டார்.. கலக்கும் மாருதி சுஸுகியின் டிசையர்!

Updated On: 

11 Nov 2024 15:22 PM

Maruti Suzuki's Dzire: NCAP என்ற குளோபல் சோதனை அமைப்பு நடத்திய பாதுகாப்பு மதிப்பீட்டில் மாருதி சுஸுகி வெளியிட்ட கார் முதல் முறையாக 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதுவரை மாருதி‌ சுஸுகி காரர்களின்‌ மதிப்பீட்டில் அதிகபட்சம் மூன்று ஸ்டார்களை வாங்கி இருந்தது. ஆனால் அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட டிசையர் காரை தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தி அந்த அமைப்பிடம் மதிப்பீட்டிற்கு கொடுத்தது.

1 / 5குளோபல் சோதனை அமைப்பான NCAP நடத்திய பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 ஸ்டார்களை மாருதி சுஸுகியின் டிசையர் மாடல் பெற்றுள்ளது.‌ மாருதி சுஸுகியின்‌ பாதுகாப்பு நெறிமுறைகள் இந்தியாவில் பொருந்தக்கூடியதாக இருந்தாலும், குளோபல் NCAP சோதனைகளில் மிகவும் மோசமான மதிப்பீட்டை பெறும்.

குளோபல் சோதனை அமைப்பான NCAP நடத்திய பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 ஸ்டார்களை மாருதி சுஸுகியின் டிசையர் மாடல் பெற்றுள்ளது.‌ மாருதி சுஸுகியின்‌ பாதுகாப்பு நெறிமுறைகள் இந்தியாவில் பொருந்தக்கூடியதாக இருந்தாலும், குளோபல் NCAP சோதனைகளில் மிகவும் மோசமான மதிப்பீட்டை பெறும்.

2 / 5

நான்காவது வெர்ஷனான‌ மாருதி சுஸுகி டிசையர்‌ இந்தியாவில் இன்று (நவம்பர் 11) அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கார் பெரியவர்களின் பாதுகாப்பு பிரிவில் 5 நட்சத்திரங்களையும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் நான்கு நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது.

3 / 5

புள்ளிகளின் அடிப்படையில், மாருதி சுஸுகி டிசையர் கார் பெரியவரின் பாதுகாப்பு மதிப்பீட்டில் 34 புள்ளிகளுக்கு 31.24 புள்ளிகளையும் குழந்தைகள் பாதுகாப்பு மதிப்பீட்டில் 49 புள்ளிகளுக்கு 39.20 புள்ளிகளும் பெற்றது.

4 / 5

இந்த சோதனை முன் மற்றும் பின் பக்க விபத்து பாதுகாப்பு, பக்கவாடு விபத்து பாதுகாப்பு என பல்வேறு பாதுகாப்பு சோதனைகளை பரிசோதித்த பின்னரே ரேட்டிங் வழங்கப்படும். இந்த பாதுகாப்பு சோதனையில் மனிதர்களுக்கு பதிலாக பொம்மை வைக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.‌ இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெரியவர்கள் பிரிவில் முழு பாதுகாப்பும் குழந்தைகள் பாதுகாப்பில் ஒரு ஸ்டார் குறைந்தும் ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது.

5 / 5

6 ஏர் பேக், 3 சீட்டுகளுக்கும் சீட் பெல்ட், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் ஏசி, மின்சார மேற்கூரை, பின்புற ஏசி வென்டுகள் என பல அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?