பால் சுரப்பை கூட்டும் பாகற்காய்.. தாய்மார்கள் மிஸ் பண்ணிராதீங்க! - Tamil News | Medicinal and health benefits of Bitter Guard | TV9 Tamil

பால் சுரப்பை கூட்டும் பாகற்காய்.. தாய்மார்கள் மிஸ் பண்ணிராதீங்க!

Published: 

23 Nov 2024 17:34 PM

Benefits of Bitter Guard: மனிதன் சுவைத்து உண்ண அறுசுவைகள் உள்ளது. அதில் கசப்பு பலராலும் வெறுக்கப்படும் ஒரு சுவையாகும். ஆனால் அந்தக் கசப்பு மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். கசப்பு நிறைந்த பாகற்காயை பலரும் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் அதனின் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் கசப்பை சகித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

1 / 5பாகற்காய்

பாகற்காய் உட்கொள்வதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவுகிறது. பாகற்காயுடன் புளி சேர்த்து சமைத்தால் மிகவும் நல்லது. வாரம் இரு முறை இதை உணவில் எடுத்துக் கொள்வதால் வயிற்றுப்புழு, இருமல், இரைப்பு, மூலம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

2 / 5

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் செரிமானம் அமிலம் சுரப்பது மேம்படும். மேலும் இது பசியை தூண்டுவதோடு கணைய புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. பாகற்காய் சாறுடன் சர்க்கரை கலந்து குடித்தால் மூலத்தினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்

3 / 5

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு அருமருந்து. ஆனால் பாகற்காய் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அதிகளவு தொடர்ந்து சாப்பிடுவது கூடாது.

4 / 5

பாகற்காயில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிக அளவில் உள்ளதால் கண் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்து. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி கண்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

5 / 5

பாகற்காய் மட்டுமல்லாமல் பாகற்காய் இலையிலும் மருத்துவ குணம் உள்ளது. இந்த இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் நாய் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?