சிவபெருமானின் அருளை பெற இந்த பரிகாரங்களை செய்யுங்கள் - Tamil News | Monday Puja tips must do these tips on Monday to get Lord Shiva blessings details in Tamil | TV9 Tamil

சிவபெருமானின் அருளை பெற இந்த பரிகாரங்களை செய்யுங்கள்

Published: 

02 Dec 2024 20:21 PM

Pooja For Lord Shiva: திங்கட்கிழமை இந்து மதத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் மகாதேவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு சிவபெருமானின் அருளுக்காக விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. விரும்பிய ஆசை நிறைவேற சிவபெருமானை வேண்டிக் கொள்கிறார்கள்.

1 / 5சிவனுக்கு திங்கட்கிழமை பிடிக்கும் என்பதும் மத நம்பிக்கை. அன்னை பார்வதியை இந்த நாளில் சிவபெருமானுடன் வழிபடுகிறார்கள். மேலும் திங்கட்கிழமையும் விரதம் அனுசரிக்கப்படுகிறது. திங்கட்கிழமை விரதம்‌ அனுஷ்டிப்பதால் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரேனும் நிதி நெருக்கடியில் சிக்கி அதிலிருந்து விடுபட விரும்பினால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையில் இருந்து விடுபட விரும்பினால் கண்டிப்பாக திங்கட்கிழமை சில வழிமுறைகளை செய்ய வேண்டும்.

சிவனுக்கு திங்கட்கிழமை பிடிக்கும் என்பதும் மத நம்பிக்கை. அன்னை பார்வதியை இந்த நாளில் சிவபெருமானுடன் வழிபடுகிறார்கள். மேலும் திங்கட்கிழமையும் விரதம் அனுசரிக்கப்படுகிறது. திங்கட்கிழமை விரதம்‌ அனுஷ்டிப்பதால் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரேனும் நிதி நெருக்கடியில் சிக்கி அதிலிருந்து விடுபட விரும்பினால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையில் இருந்து விடுபட விரும்பினால் கண்டிப்பாக திங்கட்கிழமை சில வழிமுறைகளை செய்ய வேண்டும்.

2 / 5

நீங்கள் தொடர்ந்து பணத்‌ தட்டுப்பாடு அல்லது வியாபாரத்தில் நஷ்டம் அடைந்திருந்தாலும் உங்கள் மன உறுதி குறைந்து இருந்தாலும் புதிய வேலையை தொடங்குவதற்கு முன் இரண்டு வெள்ளைப் பூக்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். வேலை முடிந்ததும் அவற்றை ஓடும் நீரில் விட வேண்டும். எதிரிகளால் தொல்லை இருந்தால் திங்கட்கிழமை நீராடி சிவபெருமானின் முன் நெய் தீபம் ஏற்றி வழிபடவும். மேலும் ஓம் ஷம்‌ஷம் சிவாய ஷம்‌ குருகுரு ஓம் என்ற மந்திரத்தை 11 முறை ஜெபிக்க வேண்டும்.

3 / 5

வாழ்க்கையில் எப்போதாவது ஒரு பிரச்சினையை நீங்கள் சந்தித்து அது தீரவில்லை என்றால் தண்ணீரில் பாலை கலந்து திங்கட்கிழமை அன்று சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் 11 வில்வ இலைகளை எடுத்து அந்த இலைகளில் சந்தனத்தால் ஓம் என்று எழுதி சொல்லுங்கள் அர்ச்சனை செய்யுங்கள். பிறகு சிவலிங்கத்தை தூபம் முதலியவற்றை வைத்து வழிபட வேண்டும்.

4 / 5

திங்கட்கிழமை சிவலிங்கத்திற்கு பால் அர்ச்சனை செய்தால் வருமானம் பெறும். முடிந்தால் பசும்பால் கொண்டு பூஜை செய்ய வேண்டும். சிவலிங்கத்திற்கு பால் அர்ச்சனை செய்யும் போது ஓம் நமச்சிவாய மந்திரத்தை 11 முறை ஜெபிக்க வேண்டும். வருமானம் பெருக சிவனே வேண்டிக் கொள்ள வேண்டும் ‌

5 / 5

வீட்டில் சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் மனக்குழப்பம் உண்டானால் திங்கட்கிழமை விரதம் இருப்பது நல்லது. அருகிலுள்ள சிவன் கோயிலில் உள்ள சிவ பெருமானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டும். மேலும் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும்.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..