Breakfast Tips: காலையில் இந்த பொருட்களை சாப்பிட வேண்டாம்! அசிடிட்டி தொல்லை தேடி வரும்! - Tamil News | morning breakfast tips to aware acidity and stomach know full details; health tips in tamil | TV9 Tamil

Breakfast Tips: காலையில் இந்த பொருட்களை சாப்பிட வேண்டாம்! அசிடிட்டி தொல்லை தேடி வரும்!

Published: 

29 Nov 2024 21:09 PM

Acidity: காலை வேளையில் காரமான அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை முறையற்ற முறையில் உட்கொள்வது அமிலத்தன்மைக்கு முக்கிய காரணமாக அமையும். இது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

1 / 5பெரும்பாலான மக்கள் காலை உணவில் உருளைக்கிழங்கு, சாண்ட்விச் போன்ற உணவுகளை எடுத்துகொள்கின்றனர். இதுபோன்ற உணவு பொருட்களை சாப்பிடுவதால், பல மணிநேரம் அமிலத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். நமது சிறுநீரகங்கள் அல்லது பிற உறுப்புகளை சேதப்படுத்த செய்யும்.

பெரும்பாலான மக்கள் காலை உணவில் உருளைக்கிழங்கு, சாண்ட்விச் போன்ற உணவுகளை எடுத்துகொள்கின்றனர். இதுபோன்ற உணவு பொருட்களை சாப்பிடுவதால், பல மணிநேரம் அமிலத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். நமது சிறுநீரகங்கள் அல்லது பிற உறுப்புகளை சேதப்படுத்த செய்யும்.

2 / 5

காலை வேளையில் காரமான அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை முறையற்ற முறையில் உட்கொள்வது அமிலத்தன்மைக்கு முக்கிய காரணமாக அமையும். இது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே சில பொருட்களை காலை உணவாக எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

3 / 5

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை போன்ற புளிப்பு நிறைந்த உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இதைச் செய்வதன் மூலம் உடலில் அமிலம் அதிகரித்து, pH சமநிலை மோசமடையும். இது அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கும்.

4 / 5

டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளதால் வெறும் வயிற்றில் குடிப்பதும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். காஃபின் அசிடிட்டியை ஏற்படுத்துவது மட்டுமின்றி உடலில் நீரிழப்பும் அதிகரிக்கிறது. வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அடிக்கடி ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படும்.

5 / 5

காலையில் வெறும் வயிற்றில் சாக்லேட், பிஸ்கட் மற்றும் பிற சர்க்கரை உணவுகளை சாப்பிடுகிறோம். இதனால் இன்சுலின் அளவு மோசமடைகிறது. இதனால் அமிலத்தன்மையும் ஏற்படலாம். எனவே வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?
குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?