Top CNG Cars: பட்ஜெட் விலையில் சிறந்த மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள்..! - Tamil News | most fuel sufficient cng cars under 10 lakhs in india in tamil | TV9 Tamil

Top CNG Cars: பட்ஜெட் விலையில் சிறந்த மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள்..!

Published: 

02 Oct 2024 13:08 PM

Top CNG Cars: எரிபொருள்களின் விளைவு உயர்வால் CNG கார்களின் தேவை சந்தையில் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் சிறந்த அம்சங்களுடன் பல புதிய கார் மாடல்களில் CNG பதிப்புகளை விற்பனை செய்து வருகின்றன. அதில் தற்போது சந்தையில் கிடைக்கும் 5 சிறந்த CNG கார்களின் தகவல் பற்றி பார்க்கலாம்.

1 / 5மாருதி

மாருதி சுசுகி செலிரியோ: சிறந்த எரிபொருள் செயல் திறனுக்காக அறியப்பட்ட மாருதி சுசுகி பெரும்பாலான கார்கள் இப்போது CNG பதிப்பில் வெளிவந்துள்ளது. இவற்றில் பட்ஜெட் விலையில் வாங்க நினைப்பவர்களுக்கு செலிரியோ சரியான தேர்வாகும். ஒரு கிலோ CNG க்கு 34.43 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இதன் விலை ரூ.5.36 லட்சத்திலிருந்து ரூ.7.05 லட்சம் வரை விற்பனையாகிறது.

2 / 5

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்: புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்ட ஸ்விஃப்ட், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் ஒரு கிலோ CNG க்கு 32.85 கிமீ வரை மைலேஜ் வழங்குகிறது. அதன் கவர்ச்சிகரமான விலை, வடிவமைப்பு, சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றால் ஸ்விஃப்ட் காரின் தேவை அதிகரித்து, காலப்போக்கில் மாற்றங்களுடன் விற்பனையாகிறது. புதிய ஸ்விஃப்ட் CNG மாடல் VXi, VXi மற்றும் ZXiஆகிய மூன்று முக்கிய‌ண வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8.20 முதல் ரூ.9.20 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 / 5

மாருதி ஃபிராங்க்ஸ் மற்றும் டொயோட்டா டாய்சர்: மாருதி சுசுகியின் ஃபிராங்க்ஸ் மற்றும் டொயோட்டா டாய்சர் மாடல்கள் ஒரே மாதிரியான தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது. CNG மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் ஒரு கிலோ CNG க்கு 28.51 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இதன் விலைகள் ரூ.8.46 லட்சம் முதல் ரூ.9.32 லட்சம் வரை விற்பனை ஆகிறது.

4 / 5

டாடா பஞ்ச்: டாடா நியூ பஞ்ச் சிறந்த CNG கார்களில் ஒன்றாகும். இதன் ஆரம்ப விலை ரூ.7.23 லட்சம் ஆகும். மேனுவல் கியர்பாக்ஸுடன் அதிகபட்சமாக ஒரு கிலோ CNG க்கு 26.99 கிமீ மைலேஜ் வழங்குகிறது

5 / 5

ஹூண்டாய் எக்ஸ்டெர்: CNG பதிப்பில் வெளிவரக்கூடிய முன்னணி கார் மாடல்களில் ஹூண்டாய் எக்ஸ்டெர் ஒன்றாகும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் ஒரு கிலோ CNG க்கு 27.1 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.8.50 லட்சமாகும்.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version