5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ajithkumar Movie Update : அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டே’ கொடுத்த ஜி.வி பிரகாஷ்..!

G.V. Prakash: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் டப்பிங் பணிகளை நடிகர் அஜித் முடித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடித்துவரும் குட் பேட் அக்லி திரைப்படத்தினை பற்றி இசையமைப்பாளர் ஜி.வி புதிய அப்டேட்டை கூறியுள்ளார்.

barath-murugan
Barath Murugan | Published: 11 Dec 2024 19:22 PM
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் அஜித் குமார். இவரின் நடிப்பில் கடைசியாகத் துணிவு திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில்  நடித்துவந்தார்.

1 / 6
இந்த திரைப்படம் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இப்படத்தினை பெற்றி எந்த ஒரு தகவல்களும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பெரும்  சங்கடத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி இரவில் வெளியாகி அஜித்தை ரசிகர்களுக்கு  பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது.

2 / 6
இந்த திரைப்படமானது வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று டீசரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கும் போதே நடிகர் அஜித்  இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இப்படத்திற்கு அஜித் இன்னும் டப்பிங் தொடங்கவில்லை.

3 / 6
இதை அடுத்தாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இசையைப்பாளராக முதலில் தேவி ஸ்ரீ பிரஷாத் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பின் சிலகாரணங்களுக்காக நீக்கப்பட்டார். பின் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டது.

4 / 6
இந்நிலையில் இப்படத்தின் இசையைப் பற்றி நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்  ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வெளியான "செலிப்பிரேஷன் அப் தி லைப்" என்ற இசைக்கு ஒரு டான்ஸ் காட்சியைப் படமாக்கினால் எப்படி இருக்கும் நன்றாக இருக்கும் அல்லவா" எனக் கூறிய பதிவு வைரலாகி வருகிறது.

5 / 6
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தற்போது குட் பேட் அக்லி, இட்லி கடை, வீர  தீர சூரன், 13 மற்றும் புறநானூறு போன்ற திரைப்படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.

6 / 6
Latest Stories