பர பர திகில்.. பதறவைக்கும் த்ரில்லர் மூவி.. மிஸ் பண்ணாம பாருங்க! - Tamil News | Must Watch Top Hollywood Horror Movie A Quiet Place Day One About Tamil | TV9 Tamil

பர பர திகில்.. பதறவைக்கும் த்ரில்லர் மூவி.. மிஸ் பண்ணாம பாருங்க!

Published: 

30 Oct 2024 08:53 AM

What To Watch : தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்புகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் வரவேற்புகள் உண்டு. இதில் முக்கியமாகத் திகில், க்ரைம் த்ரில்லர் மற்றும் ஆக்ஷ்ன் மூவி போன்ற திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் பார்ப்பவர்களைப் பதறவைக்கும் த்ரில்லர் மூவி பற்றிப் பார்க்கலாம்.

1 / 6திரைப்படங்களை

திரைப்படங்களை ரசித்துப்பார்க்கும் ரசிகர்களுக்குத் தமிழ்த் திரைப்படங்களை விட ஹாலிவுட் படங்களின் மீது மிகுதியான ஆர்வம் உண்டு அந்த வகையில் த்ரில்லர் மற்றும் ஆக்ஷ்ன் திரைப்படங்கள் பெருமளவு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்புகளை பெரும். அதுபோல் தமிழில் மக்களிடையே பெருமளவிற்கு வரவேற்பைப் பெற்ற திகில் திரைப்படம் என்ன தெரியுமா?

2 / 6

திகில் திரைப்பட வரிசையில் கடந்த ஜூலை மாதத்தில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான "யா குய்ட் பிளேஸ் டே ஒன்" (A Quiet Place: Day One). ஹாலிவுட் ஹாரோர் திரைப்படமான இந்த படத்தைப் பிரபல இயக்குநர் மைக்கேல் சர்னோஸ்கி இயக்கியுள்ளார்.

3 / 6

ஏற்கெனவே இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்று வந்த நிலையில் வெளியான இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக இந்த மூன்றாம் பாகமான இந்த "யா குய்ட் பிளேஸ் டே ஒன்" உள்ளது.

4 / 6

இந்த திரைப்படமானது "அமெரிக்க அபோகாலிப்டிக் " என்று அழைக்கப்படும் அறிவியல் புனை கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திகில் திரைப்படம் ஆகும். இது ஸ்பின்ஆஃப் என்ற புத்தகக்கடையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

5 / 6

இந்த படத்தில் சாதாரணமாக இயக்கும் அமெரிக்க நகரத்தில் பார்வையில்லாத வேற்றுக்கிரக உயிரினம் ஒன்று தனது செவித்திறனை வைத்து மனிதர்களைக் கொன்று குவிக்கும். அதிலிருந்து நோயுற்ற பெண்ணும் மற்றும் அவரை காப்பாற்றிய நடிகர்களில் ஜோசப் க்வின் மற்றும் டிஜிமோன் ஹவுன்சோ இந்த மூவரும் எப்படி உயிர்பிழைக்கிறார்கள் என இந்த கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

6 / 6

2024ல் கடந்த ஜூலை 26ல் உலகமெங்கும் வெளியான இந்த திரைப்படம் இணையத்தில் 10க்கு 7 புள்ளி ரேட்டிங் கணக்கில் "அமேசான் ப்ரைமில்" உள்ளது. இந்த த்ரில்லர் திரைப்படத்தைக் கண்டிப்பாக பாருங்கள்.

படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?
ஒரு மனிதரிடம் இருக்க வேண்டிய மிக உயர்ந்த பண்புகள் இவைதான்!
இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்!