கோலாகலமாக ஆரம்பித்த நாக சைதன்யா-சோபிதாவின் திருமண கொண்டாட்டம்! - Tamil News | Naga Chaitanya and Sobita Dhulipala's wedding celebrations begin with a bang | TV9 Tamil

கோலாகலமாக ஆரம்பித்த நாக சைதன்யா-சோபிதாவின் திருமண கொண்டாட்டம்!

Published: 

29 Nov 2024 21:06 PM

Naga Chaitanya-Shobitha : தெலுங்கு பிரபல நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று மங்கள நீராட்டு மற்றும் ஹல்தி கொண்டாட்டங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் விழாவின் பொது எடுக்கப்பட்ட சைதன்யா மற்றும் சோபிதா புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றனர்.

1 / 5தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் நடிகர் நாக சைதன்யா.  2009ம் ஆண்டு வெளியான 'ஜோஷ்' என்ற திரைப்படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமாக்கினார். இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனின் மூத்த மகன் ஆவார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் நடிகர் நாக சைதன்யா. 2009ம் ஆண்டு வெளியான 'ஜோஷ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக்கினார். இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனின் மூத்த மகன் ஆவார்.

2 / 5

இவர் கடந்த 2017ம் ஆண்டு நடிகை சமந்தாவைத் திருமணம் செய்த நிலையில் பின் சில காரணங்களுக்காக இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த நாக சைதன்யாவும் நடிகை சோபிதாவும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியது. பின் தங்களின் காதலைக் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாக சைதன்யா மற்றும் சோபிதாவும் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நிச்சயம் செய்தனர்.

3 / 5

அதன் பின் வருகின்ற டிசம்பர் 4ம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமண விழா கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளன. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் இன்று மங்கள நீராட்டு மற்றும் ஹால்டி நிகழ்ச்சி நடந்துள்ளது.

4 / 5

இதனைத் தொடர்ந்து நடிகர் சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் வருகின்ற டிசம்பர் 4ம் தேதியில் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதனிடையே தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா வீடுகளில் ஹால்டி மற்றும் மங்கள விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இரு வீட்டாரும் மணமக்களை ஒன்றாக வைத்து மாலை அணிவித்து விழா வெகு விமர்சையாக நடந்துள்ளது.

5 / 5

நாக சைதன்யா-சோபிதா திருமணம் டிசம்பர் 4ம் தேதி இரவு 8.13 மணிக்கு நடக்கிறது. இந்த திருமணவிழாவில் இரு குடும்ப உறுப்பினர்களுடன் சுமார் 300 நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். தற்போது இவர்களின் திருமண விழா கொண்டாட்டங்கள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?
குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?