சமந்தா விவாகரத்தில் அமைச்சரின் கருத்து… கொந்தளித்த பிரபலங்கள் - Tamil News | Naga Chaitanya-Samantha divorce Celebrity backlash against Konda Surekhas words | TV9 Tamil

சமந்தா விவாகரத்தில் அமைச்சரின் கருத்து… கொந்தளித்த பிரபலங்கள்

Published: 

03 Oct 2024 11:04 AM

நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ்தான் காரணம் என தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு சமந்தா - நாக சைத்தன்யா உட்பட பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

1 / 7தமிழ்,

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா.  இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார்.

2 / 7

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

3 / 7

விவாகரத்திற்கு பிறகு பல சர்ச்சைகளை சந்தித்த பின்னரும் சமந்தா - நாக சைத்தன்யா இருவரும் அவர்களது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.

4 / 7

இந்நிலையில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா - நாகசைதன்யா குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சலசலப்பை ஏற்படுத்தின. இருவரது பிரிவுக்கும் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று கொண்டா சுரேகா தெரிவித்திருந்தார்.

5 / 7

இதற்கு சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தங்களது பதிலை தெரிவித்த நிலையில் பிரபலங்கள் பலரும் அமைச்சரின் பேச்சுக்கு நடிகர்கள் நானி, ஜூனியர் என்.டி.ஆர்., ரோஜா, பிரகாஷ்ராஜ் என பலர் தங்களது  கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

6 / 7

நடிகர் நானி கூறியதாவது, “எப்பேற்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர், ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவது சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

7 / 7

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறியிருப்பதாவது, “தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது ஒரு மோசமான தாழ்வு. பொது நபர்கள், குறிப்பாக உங்களைப் போன்ற பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், தனியுரிமைக்கு கண்ணியத்தையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us On
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
Exit mobile version