நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. எங்கெங்கு? - Tamil News | new low pressure will be formed in bay of bengal tomorrow tamilnadu very heavy expected for 2 days imd alerts | TV9 Tamil

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. எங்கெங்கு?

Published: 

22 Nov 2024 06:39 AM

Tamilnadu Rains: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 / 5வடகிழக்கு

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதில், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுதது வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று ராமநாதபுரம், தூத்துக்குடியில் பெய்த கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

2 / 5

இந்த சூழலில், வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக, வரும் 23ஆம் தேதி (நாளை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

3 / 5

வங்கக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு தி திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 / 5

அதன்படி, இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 25ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கல் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5 / 5

வரும் 26ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 27ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.

தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!