5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Murugan Temple: திருச்செந்தூரில் புதிதாக திறக்கப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி… முன்பதிவு செய்வது எப்படி?

Room Booking: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சகல வசதிகளுடன் கூடிய தங்கும்படி கோயில் நிர்வாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த சேவையை இதன் மூலம் பக்தர்கள் பெற முடியும். நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சூரசம்ஹாரத்தில் பங்குபெறும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 18 Oct 2024 15:11 PM
புதிய பக்தர்கள் தங்கும் விடுதி வசதிகள்: இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bedrooms), 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks), ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages), சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

1 / 5
கட்டணம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன்  கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது. 2 பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவர் 100 முதல் 150 ரூபாய் கட்டணத்தில் தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2 / 5
முன்பதிவு செய்வது எப்படி: திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்க விரும்பும் நபர்கள் நேரடியாக கோவில் தங்குமிட வசதி அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது வெளியூர் பக்தர்கள் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற திருச்செந்தூர் கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

3 / 5
ஆனால் கோயில் தங்கும் விடுதி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செயவதற்கான வசதிகள் இணைக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

4 / 5
திருச்செந்தூர் திரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் வரும் நவம்பர் 2 2024 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகிறது சூரசம்காரம் நவம்பர் 7 2024 வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

5 / 5
Latest Stories