Murugan Temple: திருச்செந்தூரில் புதிதாக திறக்கப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி… முன்பதிவு செய்வது எப்படி? - Tamil News | New rooms have been opened for Murugan devotees at low cost at thirucendhur temple details in tamil | TV9 Tamil

Murugan Temple: திருச்செந்தூரில் புதிதாக திறக்கப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி… முன்பதிவு செய்வது எப்படி?

Updated On: 

18 Oct 2024 19:15 PM

Room Booking: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சகல வசதிகளுடன் கூடிய தங்கும்படி கோயில் நிர்வாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த சேவையை இதன் மூலம் பக்தர்கள் பெற முடியும். நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சூரசம்ஹாரத்தில் பங்குபெறும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

1 / 5புதிய

புதிய பக்தர்கள் தங்கும் விடுதி வசதிகள்: இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 100 இருவர் தங்கும் அறைகள் குளிர்சாதன வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழுவாக சென்ற பக்தர்கள் தங்குவதற்கு ஒன்பது கட்டில்களுடன் 16 அறைகளும் மேலும் ஏழு கட்டுகளுடன் 12 அறைகளும் கொண்ட படுக்கை அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages), சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

2 / 5

கட்டணம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன்  கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது. இரண்டு நபர்கள் தங்கக்கூடிய‌ அறைகளுக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி கொண்ட அறைக்கு ரூ.750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் மொத்தமாக 10 நபர்கள் ஒரே அறையில் தங்கும் டார்மெண்ட்டரிக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஒருவர் 100 முதல் 150 ரூபாய் கட்டணத்தில் தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

3 / 5

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகில் கட்டப்பட்டுள்ள புதிய தங்கும் விடுதியில் பக்தர்கள் நேரடியாக வந்து கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வர இயலாத பக்தர்கள் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்களுக்கு வேண்டிய அறையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

4 / 5

ஆனால் கோயில் தங்கும் விடுதி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செயவதற்கான வசதிகள் இணைக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இனி‌ வரும் விழாக்களில் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக இருக்கும். அடுத்த மாதம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற இருக்கும் கந்த சஷ்டி திருவிழாவிலும் சூரசம்காரம் திருவிழாவிலும் கலந்து கொள்ளும் பக்தர்கள் இந்த விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

5 / 5

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நவம்பர் 2 ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 7ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!