5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Northeast Monsoon: ரெடியா மக்களே.. தொடங்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. எப்போது தெரியுமா? வானிலை மையம் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 06 Oct 2024 17:53 PM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.  இந்த வடகிழக்கு பருவமழை 3 மாதங்களுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6
இந்தியாவில் அதிகளவு  மழை பெய்யும் காலங்கள் என்றால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவங்கள் தான். தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.   தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவு மழையை மட்டுமே பெறும். மேற்கு தொடர்ச்சி மலையொட்டி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

2 / 6
வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்திற்கு அதிக மழை பொழிவைத் தருவது. இந்த வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். வடகிழக்கு பெருமழை  60 முதல் 70 சதவீதம் வரை தமிழகத்தில் தான் அதிகமாக பொழியும்.  குறிப்பாக தென் தமிழகம், வட தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.

3 / 6
இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.  இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

4 / 6
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.  அதாவது, மழைநீர் வடிகால் பணி, மின்வாரிய கேபிள்களை அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

5 / 6
தாழ்வான பகுதிகள், மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழையின்போது பாதிக்கப்பட்ட இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அனைத்தையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

6 / 6
Follow Us
Latest Stories