Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? தீபாவளி நாளில் காத்திருக்கும் பரிசு! - Tamil News | oil companies hike dealer commission no changes in petrol diesel price | TV9 Tamil

Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? தீபாவளி நாளில் காத்திருக்கும் பரிசு!

Updated On: 

30 Oct 2024 11:17 AM

பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகை பெட்ரோல் லிட்டருக்கு 65 காசுகள், டீசல் லிட்டருக்கு 44 காசுகளும் உயர்த்தி உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

1 / 5பெட்ரோல்

பெட்ரோல் பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகை பெட்ரோல் லிட்டருக்கு 65 காசுகள், டீசல் லிட்டருக்கு 44 காசுகளும் உயர்த்தி உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பான அறிவிப்புகளை ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

2 / 5

இந்த உயர்த்தப்பட்ட டீலர்களுக்கான கமிஷன் தொகை நாளை முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பெட்ரோலிய டீலர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த திருத்தம் எங்கள் சில்லறை விற்பனை நிலையங்களில் பணிபுரியும் அனைத்து உறுதியான ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.

3 / 5

மேலும், 88 ஆயிரம் பெட்ரோல் பங்குகளின் 8 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்று கூறியுள்ளார். தற்போது, ​​டீலர்களுக்கு ஒரு கிலோ லிட்டர் பெட்ரோலுக்கு கமிஷனாக ரூ.1868 (0.875%) வழங்கப்படுகிறது. அதேபோல, டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.1,389 (0.28%0 சதவீதமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கமிஷனாக 0.65 காசுகளும், டீசலுக்கு 0.44 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

4 / 5

இந்த கமிஷன் விலை உயர்வால் ஒடிசா , சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, ஒடிசாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4.69 முதல் ரூ.4.55 குறையும் என்று கூறப்படுகிறது. அதேபோல, டீசல் லிட்டருக்கு ரூ.4.45 முதல் ரூ.4.32 குறையலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் சத்தீஸ்கரில் பெட்ரோல் விலை ரூ.2 குறையலாம் என்றும் டீசல் விலை ரூ.2 குறையும் என்று கூறப்படுகிறது.

5 / 5

உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கிய சக்தியாக கச்சா எண்ணெய் விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கிணறுகள், குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உள்ளன. எனவே கச்சா எண்ணெய்க்கு ஏற்படும் தேவை உலக நாடுகளுக்கிடையே பல நேரங்களில் பிரச்சனை உருவாக்குகின்றன. இந்த நிலையில், டீலர்களுக்கு கமிஷன் உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.75 ஆகவும், டீசல் விலை ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?