Olive Oil Benefits: ஆரோக்கியத்தின் பொக்கிஷம்.. ஆலிவ் எண்ணெயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? - Tamil News | Olive oil has many health benefits Nutritional Applications; health tips in tamil | TV9 Tamil

Olive Oil Benefits: ஆரோக்கியத்தின் பொக்கிஷம்.. ஆலிவ் எண்ணெயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

Updated On: 

30 Sep 2024 14:20 PM

Health Tips: ஆலிவ் எண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்திற்கு நல்ல மாய்ஸ்சரைசராக கருதப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் ஈ உடன், கொழுப்பு அமிலங்களும் இதில் காணப்படுகின்றன. இது உங்கள் உடலின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல் முகத்தில் கோடுகள் தோன்றுவதையும் தடுக்கிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைப்பதோடு புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.

1 / 6ஆலிவ்

ஆலிவ் எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் என்ற ஆரோக்கியமான கொழுப்பு, வயிறு பகுதியில் இருக்கும் தொப்பை போன்ற அதிகபடியான எடையைக் குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆலிவ் ஆயிலை சரியான அளவில் பயன்படுத்தினால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். உடல் பருமனை குறைக்க தினமும் காலையில் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்வது நல்லது.

2 / 6

ஆலிவ் எண்ணெய் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளையும் அதிகளவில் கொண்டுள்ளது. அதிலும், குறிப்பாக உங்கள் உடலில் நீண்டகாலமாக இருக்கும் வீக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது புற்றுநோய், அல்சைமர், இதய நோய், சர்க்கரை நோய், மூட்டுவலி போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.

3 / 6

ஆலிவ் எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் வைட்டமின் டி போன்றவை ஏராளமாக காணப்படுகிறது. இவை உங்கள் தலையில் உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடிக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4 / 6

உங்கள் உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லியோபுரோட்டீன் அல்லது கெட்ட கொழுப்பைக் கணிசமாகக் குறைக்க ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய் நம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.

5 / 6

ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது. இதற்கு தினமும் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் சுத்தமான ஆலிவ் எண்ணெயை குடிப்பது நல்லது.

6 / 6

சருமத்தின் ஈரப்பதத்திற்கு நல்ல மாய்ஸ்சரைசராக ஆலிவ் எண்ணெய் செயல்படுகிறது. ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஏ, ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!