Paralympics 2024: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. பேட்மிண்டனில் கலக்கிய நிதேஷ் குமார்..! - Tamil News | Paralympics 2024: Nitesh Kumar on winning the coveted Gold in men's singles SL3 badminton | TV9 Tamil

Paralympics 2024: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. பேட்மிண்டனில் கலக்கிய நிதேஷ் குமார்..!

Published: 

02 Sep 2024 18:33 PM

Nitesh Kumar: முதல்முறையாக பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நித்தேஷ், முதல் முயற்சியிலேயே தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை நிதேஷ் குமார் பெற்றுள்ளார்.

1 / 7பாரீஸ்

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் இந்தியா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. இந்த பதக்கத்தை பாரா பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் பேட்மிண்டனில் வென்று அசத்தியுள்ளார்.

2 / 7

பேட்மிண்டனின் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் கிரேட் பிரிட்டனின் டேனியல் பெத்தேலை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் தோற்கடித்து நிதேஷ் குமார் தங்கப் பதக்கத்தை வென்றார். 2024 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஒன்பதாவது பதக்கம் இதுவாகும்.

3 / 7

முதல்முறையாக பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நித்தேஷ், முதல் முயற்சியிலேயே தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

4 / 7

மேலும், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை நிதேஷ் குமார் பெற்றுள்ளார். இவருக்கு முன், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா தங்கம் வென்றுள்ளனர்.

5 / 7

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது. நடப்பு விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை நிதேஷ்குமார் பெற்றுள்ளார்.

6 / 7

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இதுவரை 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் அவ்னி லெகாரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

7 / 7

அதேபோல் உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் வெள்ளியும், வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா வெள்ளியும், பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!