Aman Sehrawat: ஒலிம்பிக்கில் இந்தியா மற்றொரு பதக்கத்தை வெல்லுமா..? அரையிறுதிக்கு முன்னேறிய அமன் ஷெராவத்! - Tamil News | Paris Olympics 2024 Aman Sehrawat qualifies for semifinals in men's 57 kg freestyle wrestling | TV9 Tamil

Aman Sehrawat: ஒலிம்பிக்கில் இந்தியா மற்றொரு பதக்கத்தை வெல்லுமா..? அரையிறுதிக்கு முன்னேறிய அமன் ஷெராவத்!

Published: 

08 Aug 2024 17:55 PM

Paris Olympics 2024: ஹரியானாவைச் சேர்ந்த இந்திய ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடந்த 2024 ஆசிய மல்யுத்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். இதன்மூலம், 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற ஒரே ஆண் மல்யுத்த வீரர் இவர் ஆவார். இதற்குமுன், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

1 / 7மற்றொரு

மற்றொரு இந்திய மல்யுத்த வீரரான அமன் ஷெராவத் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப் பிரிவில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார் அமன் ஷெராவத்.

2 / 7

இப்போது அமன் ஷெராவத் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஒரு வெற்றி மட்டும் தேவையாக உள்ளது. அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று அமன் ஷெராவத் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தால் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்வார்.

3 / 7

முன்னதாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை வீழ்த்தி அமன் செஹ்ராவத் காலிறுதிக்கு முன்னேறினார். அதன்பிறகு நடந்த காலிறுதி போட்டியில் அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகரோவை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் அமன் ஷெராவத்.

4 / 7

அமன் ஷெராவத் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்தால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகும். அங்கேயும் அமன் ஷெராவத் வெற்றி பெற்றால் தங்கப் பதக்கம் இந்தியாவிற்காக பெற்று தருவார்.

5 / 7

முன்னதாக, ஹரியானாவைச் சேர்ந்த இந்திய ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடந்த 2024 ஆசிய மல்யுத்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். இதன்மூலம், 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற ஒரே ஆண் மல்யுத்த வீரர் இவர் ஆவார்.

6 / 7

இதற்குமுன், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதை தொடர்ந்து, ஏப்ரல் 2023ம் ஆண்டு கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.

7 / 7

டெல்லியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் பயிற்சியாளர் பிரவீன் தஹியாவிடம் மல்யுத்த வித்தைகளை அமன் கற்றுக்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் சீனாவின் ஜூ வான்ஹாவோவை 10-0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!