மாதவிடாய் வலி குறையணுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க! - Tamil News | | TV9 Tamil

மாதவிடாய் வலி குறையணுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

Updated On: 

11 Jul 2024 08:23 AM

பெண்கள் தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை மாதவிடாய் சுழற்சியோடு கடந்த செல்கின்றனர். இந்த மாதவிடாய் நாட்களில் பெண்கள் முதுகு வலி, கை, கால் வலி வயிறு வலி என தொடங்கி உடல் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர். இந்த மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1 / 6பெண்கள்

பெண்கள் தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை மாதவிடாய் சுழற்சியோடு கடந்த செல்கின்றனர். இந்த மாதவிடாய் நாட்களில் பெண்கள் முதுகு வலி, கை, கால் வலி வயிறு வலி என தொடங்கி உடல் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

2 / 6

மாதவிடாய் காலத்தில் வலி என்பது அதிகமாக இருக்கும். எனவே, அதனை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3 / 6

மாதவிடாய் காலத்தில் கீரை மற்றும் பாதாம் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகள் தசைகளை தளர்த்தவும், வலிகளை குறைக்கவும் உதவுகின்றன. மாதவிடாயின் போது வலியை குறைப்பதற்கு உடலை நீரேற்றமாக வைப்பது அவசியம். எனவே, மாதவிடாய் காலத்தில் தண்ணீர் அதிமாக குடிக்க வேண்டும்.

4 / 6

வாழைப்பழங்கள் பொதுவாக பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளதா இது தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது.

5 / 6

மாதவிடாயின் போது நமது உடலுக்கு அதிக அளவில் கால்சியம் தேவைப்படுவதால் குறைந்த கொழுப்புள்ள தயிர் சாப்பிடுவது நல்லது. வயிற்றுப் பிரச்சனைகளை எதிர்த்து போராட தயிர் உதவுகிறது.

6 / 6

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலங்களில் ரத்தங்கள் அதிக அளவில் வெளியேறுவதால் இரும்புச் சக்தியும் இழக்கும் நிலை இருக்கும். இதனால் பெண்கள் மந்தமாகவும் சோர்வாகவும் இருப்பதாக உணர்வீர்கள். இதனால் அதிக அளவில் கிரைகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவது நல்லது.

தினசரி சாப்பிடும் காபி, டீயில் சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் என்ன ஆகும்?
பப்பாளி பழத்துடன் இந்த உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது!
அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்!
பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?