PM Modi Kanniyakumari Visit: வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை.. தியானத்திற்கு சென்ற பிரதமர் மோடி! - Tamil News | | TV9 Tamil

PM Modi Kanniyakumari Visit: வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை.. தியானத்திற்கு சென்ற பிரதமர் மோடி!

Updated On: 

31 May 2024 07:51 AM

PM Modi Kanniyakumari Visit: மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று கன்னியாகுமரி வந்தார். அங்கு கடலுக்கு நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று தனது தியானத்தை தொடங்கினார். பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற திரவு உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

1 / 6மக்களவை

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு நேற்று மாலை வந்தார்.

2 / 6

அதன்பிறகு பகவதியம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்குள்ள ஸ்ரீ பாத மண்டபத்தில் பகவதி அம்மன் கால் பதித்த இடத்தில் மலர் வைத்து பிரதமர் மோடி வணங்கினார். அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சர் படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி வணங்கினார்.

3 / 6

கோயில் தரிசனத்திற்கு பிறகு படகில் கடலுக்கு நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்கு சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலையின் முன்பு சென்ற பிரதமர், பாதத்தில் மலர் வைத்து வணங்கினார்.

4 / 6

அங்கு சில நிமிடங்கள் பிரதமர் மோடி கை கூப்பி, கண்களை மூடி அமைதியாக நின்றார். அதன்பிறகு அவர் விவேகானந்தர் தியான மண்டபத்தில் நின்றபடி கடல் அழகை ரசித்தார்.

5 / 6

அப்போது, பிரதமர் மோடி அணிந்திருந்த உடை கவனம் பெற்றுள்ளது. அதாவது, பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடையில் அங்கு சென்றார். பட்டு சட்டை, வேஷ்டி அணிந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றார்.

6 / 6

பிரதமர் மோடி வெள்ளை வேட்டி சட்டை அணிவது முதல்முறையல்ல.. தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது எல்லாம் வேட்டி சட்டையில் தான் வருவார். 3 நாள் தியானத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாளை மதியம் டெல்லிக்கு புறப்பட உள்ளார்.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version