Late Night Eating Side Effects: இரவு தாமதமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..! - Tamil News | Problems caused by eating late at night; health tips in tamil | TV9 Tamil

Late Night Eating Side Effects: இரவு தாமதமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!

Published: 

11 Oct 2024 22:27 PM

Foods: நீங்கள் இரவில் தாமதமாக சாப்பிடுகிறீர்கள் என்றால், லேசான உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதன் மூலம், உணவு விரைவில் செரிமானமாகி, தூங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. தாமதமாக சாப்பிட்டதும் உடனடியாக தூங்க செல்லாமல், சிறிது நேரம் நடந்து கொடுங்கள். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்தில் கனமான உணவுகளை எடுத்து கொள்வதை தவிருங்கள்.

1 / 6ஒரு

ஒரு காலத்தில் மக்கள் இரவு 7-8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டு 10 மணிக்குள் தூங்க சென்று விடுவார்கள். தற்போதைய நவீன காலத்தில் மக்கள் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் சாப்பிட்டு 11-12 மணிக்குதான் தூங்க செல்கிறார்கள். இது உங்கள் வயிற்றில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

2 / 6

நீங்கள் தாமதமாக சாப்பிடுவதை பழக்கமாக்கி கொண்டால் அசிடிட்டி பிரச்சனையை அடிக்கடி சந்திக்க நேரிடும். இரவு நேரத்தில் நீங்கள் தாமதமாக சாப்பிடும்போது, உணவுக்குழாய் வால்வு தளர்ந்து, படுக்கும்போது அமிலம் மீண்டும் குழாய்க்குள் வரத் தொடங்குகிறது.

3 / 6

இதன் காரணமாக, நீங்கள் இரவு நேரத்தில் மார்பு அல்லது வயிற்றில் எரியும் உணர்வை சந்திப்பீர்கள். எனவே, சூரிய அஸ்தமனத்திற்கு முன் அல்லது அதிகபட்சம் 7 மணிக்கு இரவு உணவை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

4 / 6

இரவில் தாமதமாக ஸ்நாக்ஸ் அல்லது உணவு சாப்பிட்டால், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும். எனவே, சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் இடையில் குறைந்தது 2 மணிநேர இடைவெளியை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த நேரம் உங்கள் செரிமானத்திற்கு பெரிய உதவியை செய்யும்.

5 / 6

நீங்கள் இரவில் தாமதமாக சாப்பிடுகிறீர்கள் என்றால், லேசான உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதன் மூலம், உணவு விரைவில் செரிமானமாகி, தூங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. தாமதமாக சாப்பிட்டதும் உடனடியாக தூங்க செல்லாமல், சிறிது நேரம் நடந்து கொடுங்கள்.

6 / 6

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்தில் கனமான உணவுகளை எடுத்து கொள்வதை தவிருங்கள். பெரும்பாலான மக்கள் சிக்கன் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது இரவு நேரத்தில் அஜீரண பிரச்சனையை உண்டாக்கி உங்களது தூக்கத்தை கெடுக்கும்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?