கண் பிரச்னைகள் வராமல் இருக்கணுமா? இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க! - Tamil News | Problems do not come with this habits details in Tamil | TV9 Tamil

கண் பிரச்னைகள் வராமல் இருக்கணுமா? இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!

Published: 

28 Nov 2024 18:44 PM

Eye Care Tips: கண் பார்வை மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. கண்கள் சரியாக தெரிந்தால் தான் எதையும் நம்மால் செய்ய முடியும். சரியான பார்வை இல்லை என்றால் எந்த வேலையும் நம்மால் செய்ய முடியாது. எனவே கண்கள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

1 / 5சமீப காலமாக கண் பிரச்சனைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் திரையை அதிக நேரம் பார்ப்பது‌ தான்.‌ செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றால் ஏற்படும் கதிர்வீச்சு மூலம் கண் பாதிப்பு ஏற்படுகிறது. இது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. கண்கள் வறண்டு வலி ஏற்படுகிறது. எனவே மின்சாதன பொருட்களின் திரையை பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

சமீப காலமாக கண் பிரச்சனைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் திரையை அதிக நேரம் பார்ப்பது‌ தான்.‌ செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றால் ஏற்படும் கதிர்வீச்சு மூலம் கண் பாதிப்பு ஏற்படுகிறது. இது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. கண்கள் வறண்டு வலி ஏற்படுகிறது. எனவே மின்சாதன பொருட்களின் திரையை பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

2 / 5

கண்கள் ஆரோக்கியமாக இருக்க கருப்பு கண்ணாடி அணிய வேண்டும். வெளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து கண்ணை பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது நல்லது. இதனால் சூரிய ஒளி நேரடியாக கண்களில் படுவதில்லை. இதனால் கண் பிரச்சனைகள் குறையும்.

3 / 5

கண்கள் ஆரோக்கியமாக இருக்க கண்களின் ஈரப்பதத்தை உறுதி செய்ய வேண்டும். கண்கள் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதனால் அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய கண்ணீர் குடிப்பதால் கண் வறண்டு போகாது.

4 / 5

உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு பிரச்சனைக்கும் முதலில் தீர்வு காண முடியும். இல்லையெனில், அவை பெரிதாக வளரும் அபாயம் உள்ளது.

5 / 5

கண்கள் ஆரோக்கியமாக இருக்க, சரியான உணவை உண்ண வேண்டும். நீங்கள் உண்ணும் உணவின் மூலம் உங்கள் கண்கள் 75 சதவீதம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே நீங்கள் உண்ணும் உணவுகளில் வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல, நல்ல இரவு தூக்கமும் அவசியம். சரியாக தூங்கினால்தான் கண்கள் நன்றாக இருக்கும்.

ஏன் நின்று கொண்டு பால் குடிக்க வேண்டும்..?
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?