5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sai baba: நினைத்தது நிறைவேறும்! – சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதம் பற்றி தெரியுமா?

Fasting for Saibaba: சமீப காலமாக சாய்பாபாவின் வழிபாடு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோயில்களில் பக்தர்கள் ஏராளமான சாய்பாபாவை வழிபட்டு வருகிறார்கள்.‌ நினைத்தது நிறைவேற சாய்பாபா சொன்னதாக பின்பற்றப்படும் 9 வியாழக்கிழமை எளிய விரத முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 14 Nov 2024 08:15 AM
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையிலிருந்தும் ஆரம்பிக்கலாம். விரதத்தை ஆரம்பிக்கும் முன்னர் சாய் நாமத்தை மனதார வேண்டிக்கொண்டு ஆரம்பிக்க வேண்டும். விரதத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய் பாபாவை எண்ணிக் கொண்டு வேண்டிக்கொள்ள வேண்டும்.

1 / 5
காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சாய்பாபாவின் படத்திற்கு அல்லது விக்கிரகத்திற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தின் போது திரவ ஆகாரங்கள் உட்கொள்ளலாம். அதாவது பால், நீர், ஜூஸ் போன்றவற்றை உண்ணலாம். அப்படி நாள் முழுதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை மதியமோ அல்லது இரவோ உணவு அருந்திக் கொள்ளலாம். நாள் முழுவதும் பட்டினியாக இருந்து மட்டும் இந்த விரதத்தை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

2 / 5
ஒரு தூய டேபிள் அல்லது பலகையிலோ மஞ்சள் நிற துணியை விரித்து சாய்பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் கிடைத்தால் அதை படத்திற்கோ அல்லது பாபாவின் விக்ரகத்திற்கோ போட்டுவிட வேண்டும்.

3 / 5
நைவேத்தியமாக பாபாவிற்கு பிடித்த பசலைக்கீரை, அல்வா, கஞ்சி, கூழ், பழங்கள், இனிப்புகள், கல்கண்டு பிரசாதம் ஆகியவற்றை சமர்ப்பித்து தீப, தூப ஆராதனை செய்து பாபாவை வணங்க வேண்டும். முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்கு சென்று வரலாம். வீட்டிலேயே சாய்பாபாவிற்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்த பின்பு இந்த விரதம் நிறைவு பெறுகிறது.

4 / 5
பூஜையின் போது சாய் விரத கதைகளை கேட்கலாம் அல்லது சாய் கதைகள், சாய் பாமாலை அல்லது சாய் பவனி ஆகியவற்றை பக்தியுடன் படிக்கலாம். வெளியூர் செல்வதாக இருந்தாலும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கோ காரணங்களுக்காக விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் கொள்ளாமல் மற்றொரு வியாழக்கிழமை தொடர்ந்து அந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நேராக உணவளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமாகவும் உணவு பொருளாகவோ கொடுத்து உதவி செய்வதை பாபா முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார்.

5 / 5
Latest Stories