2வது வாரமாக வசூல் வேட்டை.. ரஜினியின் ‘வேட்டையன்’ கலெக்‌ஷன்! - Tamil News | Rajinikath Vettaiyan Movie 7th Day Box Office Collection Details | TV9 Tamil

2வது வாரமாக வசூல் வேட்டை.. ரஜினியின் ‘வேட்டையன்’ கலெக்‌ஷன்!

Published: 

17 Oct 2024 19:10 PM

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2வது வாரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு உள்ள திரைப்படம் வேட்டையன். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல திரையுலக பிரபலங்களின் முன்னணி நடிப்பில் வெளியாகியது. தற்போது இரண்டு வாரங்களுக்கு மேல் வெளியாகிவரும் நிலையில் பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

1 / 7பிரபல

பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கிய திரைப்படம் வேட்டையன் இதில் நடிகர் ரஜினி அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, கிஷோர், துஷாரா விஜயன், ரக்‌ஷன் எனப் பல திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்

2 / 7

கடந்த அக்டோபர் 10 ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தில் இந்தி சினிமாவில் சுமார் 50 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க மிகப்பெரிய பிரபலம் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

3 / 7

தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினியின் 171 திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் திரைப்படமான கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

4 / 7

கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் கூலி திரைப்படத்தின் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நேற்று முதல் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

5 / 7

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாகத் திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டநிலையில் அதைச் சமாளிக்கும் எண்ணத்தில் படக்குழு இத்திரைப்படத்தை ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் சுமார் 90 கோடிகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது.

6 / 7

இந்த திரைப்படமானது ஓடிடியில் வருகின்ற நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுமார் 200கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் 89 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் உலகளாவிய வசூலில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா ?

7 / 7

ரஜினியின் வேட்டையன் திரைப்படம் உலகளாவிய வசூலில் தற்போது 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் தமிழகத்தில் இத்திரைப்படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்திய நடிகை இந்த குழந்தை...
நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...