5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rameshwaram Rains: மேகவெடிப்பு.. ராமேஸ்வரத்தில் 41 செ.மீ மழை.. கரைபுரளும் வெள்ளம்!

ராமநாதபுரம் மழை: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பனில் கனமழை பெய்தது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 21 Nov 2024 07:28 AM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே,  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக நேற்று முதல் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது.  நேற்று நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக, இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

1 / 5
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்தில் 41 செ.மீ மழை கொடித் தீர்த்துள்ளது. இதற்கு முன்னர் ராமேஸ்வரத்தில் இவ்வளவு பெரிய மழை பெய்ததில்லை. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பனில் கனமழை பெய்தது.

2 / 5
இதனால், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பனில் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மழை இன்றும் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது. அதோடு இன்று, தென் தமிழகத்தில் கனமழை முதல் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

3 / 5
நாகை, திருவாரூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.  மேலும், நாளை மறுநாள் (நவம்பர் 23) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்து இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 / 5
எனவே, இன்று முதல் சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Latest Stories