பிரதமர் மோடி வீடு முன்பு திரண்ட பாலிவுட் பிரபலங்கள்.. காரணம் இதுவா? - Tamil News | ranbir Kapoor alia bhatt and kareena kapoor delhi to meet pm modi for raj kapoor birth aniversary | TV9 Tamil

பிரதமர் மோடி வீடு முன்பு திரண்ட பாலிவுட் பிரபலங்கள்.. காரணம் இதுவா?

Updated On: 

11 Dec 2024 10:02 AM

பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர் கான் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் ராஜ் கபூர் நூற்றாண்டு திரைப்பட விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக நேற்று டெல்லி புறப்பட்டனர். இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 / 5பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர் கான் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் ராஜ் கபூர் நூற்றாண்டு திரைப்பட விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக நேற்று டெல்லி புறப்பட்டனர். இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர் கான் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் ராஜ் கபூர் நூற்றாண்டு திரைப்பட விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக நேற்று டெல்லி புறப்பட்டனர். இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 / 5

ஆலியா பாட் சிவப்பு நிற புடவையிலும், கருப்பு நிற பங்களா உடையில் ரம்பீர் கபூரும், சிவப்பு நிற சல்வாரில் கரீனா கபூர், வெள்ளை நிற குர்தாவில் சைஃப் அலிகானும் வந்திருந்தனர். சொகுசு காரில் வந்திருங்கிய இவர்களது வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3 / 5

ராஜ் கபூரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் மற்றும் ஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் இணைந்து திரைப்பட விழாவை நடத்துகிறது. இந்தியாவில் உள்ள 34 நகரங்களில் உள்ள 101 திரையரங்குகளில் திரைப்பட விழா நடைபெறுகிறது. டிசம்பர் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை திரைப்பட விழா நடைபெறுகிறது.

4 / 5

நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ராஜ் கபூரின் தலைசிறந்த படைப்புகளை பெரிய திரையில் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது. ஆவாரா (1951), ஸ்ரீ 420 (1955), சங்கம் (1964), மேரா நாம் ஜோக்கர் (1970) போன்ற கிளாசிக் திரைப்படங்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட உள்ளது.

5 / 5

இந்திய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்பட்ட ராஜ் கபூர் 1988ஆம் இறந்தார். அவரது மகன்கள் ரிஷி கபூர் மற்றும் ரந்தீர் கபூர் இந்தி சினிமாவில் அவரது நடிப்பை முன்னெடுத்துச் சென்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூர், கரீனா கபூர், நீது கபூர் ஆகியோர் பாலிவுட்டில் பிரபலமான நட்சத்திரங்களாக உள்ளனர்.

இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
மாதுளை இலைகளில் கிடைக்கும் ஏராள நன்மைகள்!