5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ratan Tata: வளர்ப்பு நாய், சமையல்காரர்களுக்கு சொத்தில் பங்கு.. ரத்தன் டாடாவின் வியக்க வைக்கும் உயில்!

சமீபத்தில் காலமான தொழிலதிபர் ரத்தன் டாடா, தன் வளர்ப்பு நாய் டிட்டோவை பராமரிப்பதற்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். மேலும், தன்னிடம் நீண்ட காலமாக வேலை பார்த்த ராஜன் ஷா, சமையல்காரர் சுப்பையா, உதவியாளர் சாந்தனு நாயுடு ஆகியோருக்கும் சொத்துக்களை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளார்.

umabarkavi-k
Umabarkavi K | Published: 25 Oct 2024 16:43 PM
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா  அக்டோர் 9ஆம் தேதி காலமானார்.  இவரது மறைவு அனைவரும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உலக அளவில் ரத்தன் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா. மேலும், பல தொழிலதிபர்கள், இளைஞர்களுக்கு பெரிதும் இன்ஸ்பிரெஸனாகவும் இருந்துள்ளார்.  இவரது காலத்தில் டாடா குழுமத்தின் பங்குகள் அசுர வளர்ச்சி அடைந்தது என்றே சொல்லலாம்.  இவரது மறைவுக்கு ரத்தன் டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி இருந்து வந்தது.

1 / 6
அண்மையில் டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.  அதே நேரத்தில் ரத்தன் டாடாவுக்கு ரூ.10,000 கோடி சொத்துக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை யாருக்கு அவர் எழுதி வைத்திருப்பார் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில்,  ரத்த டாடா எழுதியுள்ள உயிர் விவரங்களை தற்போது வெளியாகி உள்ளது.

2 / 6
அதன்படி, ரூ.10,000 கோடிக்கு மேல் இருக்கும் சொத்துக்களின் ஒரு பகுதியை தனது அறக்கட்டளைக்கு அவர் ஒதுக்கி உள்ளார். மேலும்,  சகோதரர் ஜிம்மி டாடா, அவரது ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரின் மற்றும் தினா ஜீஸ்பாய் ஆகியோருக்கு குறிப்பிட்ட சொத்துகளை கொடுத்துள்ளார். மேலும், வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள், நெருக்கமானவர்களுக்கு அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.  இதில் குறிப்பாக அவரது உயிராக இருக்கும்  ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் 'டிட்டோ'வுக்காக குறிப்பிட்ட சொத்தை ஒதுக்கியுள்ளார்.

3 / 6
டிட்டோவின் பராமரிப்பு செலவுக்காக   தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ளார் ரத்தன் டாடா. இவர் கடந்த 6 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். அவரது இரு மூச்சு வரை அவருடன்  டிட்டோ உடன் இருந்துள்ளது. அவரது இறுதிச் சடங்கிலும் டிட்டோ கலந்து கொண்டது.  இந்தியாவில் செல்லப் பிராணியின் பெயரால் ஒருவருடைய சொத்துக்குப் பெயர் வைப்பது இதுவே முதல்முறை.  ஆனால் வெளிநாடுகளில் இது போன்று செல்லப்பிராணிகளுக்கு உயில் எழுதி வைப்பது காலம் காலமாக இருந்து வருகிறது.

4 / 6
மேலும், சமையல்காரராகப் பணியாற்றிய ராஜன் ஷா மற்றும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவரது பட்லராகப் பணியாற்றிய சுப்பையா ஆகியோருக்கும் சொத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரத்தன் டாடா தனது வீட்டு ஊழியர்களுடன் மிகவும் ஆழமான உறவைக் கொண்டிருந்தார். அவர் வெளிநாடு சென்று திரும்பும் போது, ​​​​அவர்களுக்காக டிசைனர் ஆடைகளை அடிக்கடி கொண்டு வருவார். ரத்தன் டாடா தனது வீட்டில் உள்ள அனைத்து ஊழியர்களின்  எதிர்காலத்திற்காக அவர்களுக்கு சொத்து எழுதி வைத்துள்ளார்.

5 / 6
ரத்தன் டாடாவின் நீண்டகால உதவியாளரான சாந்தனு நாயுடுவுக்கு சொத்து எழுதி வைத்துள்ளர்.  சாந்தனு நாயுடு வெளிநாடு சென்று படித்த கடனும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தனது குட்ஃபெல்லோஸ் நிறுவனத்தில் சாந்தனுக்கு சில பங்குகளை ஒதுக்கி உள்ளதாகவும் தெரிகிறது. ரத்தன் டாடாவின் உயில் உடனடியாக நடைமுறைக்கு வராது என்றும், நீதிமன்ற விசாரணைக்கு பிறகே சொத்துக்கள் இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

6 / 6
Latest Stories