15 வயதில் சினிமா.. தொடர் வெற்றி.. நடிகை அசின் சினிமா பயணம்! - Tamil News | The Reason for actress Asin's departure from Tamil cinema | TV9 Tamil

15 வயதில் சினிமா.. தொடர் வெற்றி.. நடிகை அசின் சினிமா பயணம்!

Published: 

04 Oct 2024 12:20 PM

Actress Asin : தமிழ் சினிமாவில் பல முன்னை நடிகைகள் இருக்கின்றனர். ஆனால் 2000ல் திரைப்படங்களைக் கலக்கியவர் நடிகை அசின். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் இவருக்குத் தொடர் வெற்றியைத் தந்தது.

1 / 7தமிழ்த்

தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அசின் 2000ல் இருந்து தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் திரிஷா போன்ற நடிகைகளின் லிஸ்டில் இவர் இருந்தார். நடிகை அசின் மலையாளத்தில் 2001ல் வெளியான "நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா" என்ற திரைப்படத்தில் துணை நடிகையாகத் தனது 15 வயதில் அறிமுகமாக்கினார்.

2 / 7

பின் சில ஆண்டுகள் கழித்து 2003ல் தெலுங்கு திரைப்படமான "அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி" என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

3 / 7

இவர் 2004ல் தமிழில் "எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி" என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்து தமிழில் அறிமுகமானர். இத்திரைப்படத்தில் மலையாள பெண்ணாக நடித்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இத்திரைப்படத்தைத் தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி மற்றும் வேல் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடையே நீங்காத இடத்தை பிடித்தார்.

4 / 7

இந்த திரைப்படங்களில் கஜினி திரைப்படமானது இவருக்கு "பிளாக் பாஸ்டர்" ஹிட்டை தந்தது. இந்த திரைப்படத்தில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். இதையடுத்து தான் நடிகர்கள் விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் இவருக்குக் கிடைத்தது.

5 / 7

இந்த கஜினி திரைப்படத்தை இந்தியில் ரீமேக்கிலும் நடிகர் சல்மான்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமானார். பின் இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் சல்மான்கான் உடன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் பாலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

6 / 7

இந்தியில் சல்மான்கானுடன் தொடர் படங்களில் நடித்தார் இவர் 2011ல் வெளியான "ரெடி" படப்பிடிப்புக்காகப் படக்குழு இலங்கை சென்றது. அப்போது இலங்கையில் நடந்த போர் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலிருந்து யாரும் இலங்கைக்குச் செல்லக்கூடாது, இலங்கையிலிருந்து யாரும் இந்தியாவுக்கு வரக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

7 / 7

இந்த காரணத்தால் அசினை இனி தமிழ் சினிமாவில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கண்டனங்களும் எழுந்தன. அந்த நேரத்தில் தன்னுடைய் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்திய அசின், 2016ல் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?