Sleeping Disturbance: தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூக்கம் கெடுகிறதா..? இதுவே முக்கிய காரணங்கள்..! - Tamil News | Reasons for falling asleep at the same time every night; health tips in tamil | TV9 Tamil

Sleeping Disturbance: தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூக்கம் கெடுகிறதா..? இதுவே முக்கிய காரணங்கள்..!

Published: 

16 Nov 2024 08:35 AM

Health Tips: வயது அதிகரிக்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், உங்களுக்கு தூக்கம் கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, வயதானவர்கள் அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுவார்கள்.

1 / 6இரவு

இரவு நேரத்தில் நீங்கள் அடிக்கடி இரவு 3 மணியில் அதிகாலை 5 மணிக்கு எழுந்தால், இதற்கு கெட்ட கனவோ, பேயோ காரணம் இல்லை. அதற்கு மருத்துவரீதியாக பல காரணங்கள் உண்டு. இப்படி தூக்கம் தடைப்படும்போது, பகலில் ஆற்றல் குறைவு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

2 / 6

இதற்கு பல காரணங்கள் இருந்தால் ஹார்மோன் மாற்றம், சிறுநீப்பையில் சர்க்கரையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவை மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

3 / 6

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த இரசாயங்களை உடல் வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கல்லீரல் மற்றும் தசைகளில் இருந்து குளுக்கோஸை வெளியிடும். இதனால், தூக்கம் சீர்குலைய தொடங்கும்.

4 / 6

நீடித்த மன அழுத்தத்தால் ஏற்படும் அதிக கார்டிசோல் அளவுகள் ஆகும். மன அழுத்த ஹார்மோன் என்றும் அழைக்கப்படும் கார்டிசோல், நமது உடலின் ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்துவதில் பல செயல்பாடுகளை மேற்கொள்ளும். இதனால், தூக்கம் கெடும்.

5 / 6

இரவு அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுவதற்கு சர்க்காடியன் ரிதமும் ஒரு காரணமாக இருக்கலாம். உடலின் பழுது சரி செய்யவும், நச்சுத்தன்மை வெளியேற நுரையீரல் மாலை 3 முதல் 5 மணி வரை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும். இதனால் கூட உங்களது தூக்கம் கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

6 / 6

வயது அதிகரிக்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், உங்களுக்கு தூக்கம் கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, வயதானவர்கள் அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுவார்கள். வயதாகும்போது, ​​​​நம் உடல் மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை மிகச் சிறிய அளவில் வெளியிடுகிறது.

மயோனைஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க இதை பண்ணுங்க
தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!