Health Tips: டீ குடிக்கும்போது ரஸ்க் சாப்பிட்டால் ஆபத்தா? உண்மை என்ன? - Tamil News | Rusk with tea side effect of eating rusk with tea in the morning know reason to avoid details in Tamil | TV9 Tamil

Health Tips: டீ குடிக்கும்போது ரஸ்க் சாப்பிட்டால் ஆபத்தா? உண்மை என்ன?

Updated On: 

14 Nov 2024 14:18 PM

Rusk With Tea: சூடான டீயுடன் ரஸ்க் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இந்தப் பழக்கம் அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். மேலும், இது பல நோய்களை வரவழைக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் தீங்கு விளைவிக்க கூடியது.

1 / 5சூடான

சூடான டீயுடன் ரஸ்க் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. பலர் தினமும் காலையில் தேநீருடன் ரஸ்க் மற்றும் பிஸ்கட் சாப்பிட விரும்புகிறார்கள். இந்த சிற்றுண்டி மாலையிலும் உண்ணப்படுகிறது. பலர் இதை ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதுகின்றனர். ஆனால் ரஸ்க் உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குகிறதா? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

2 / 5

ரஸ்க்களில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பொருட்கள் உள்ளன. எளிமையாகச் சொன்னால், அது மெதுவாக உடலில் நுழையும் விஷம் போன்றது. இது உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். இது மாவு, சர்க்கரை மற்றும் மலிவான எண்ணெய்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நிறைய டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது. எனவே இது இதய ஆரோக்கியத்திற்கும் உடல் எடைக்கும் ஆபத்தானது. மேலும், இதில் உள்ள பசையம் (குளுட்டன்)ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

3 / 5

கடைகளில் கிடைக்கும்இரண்டாம் தர ரஸ்க்குகள் பெரும்பாலும் பழைய ரொட்டியில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. இந்த ரஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் மிகவும் மலிவானவை மட்டுமல்ல, தரம் குறைந்தவை. எனவே இவை இதய நோய்க்கு வழிவகுக்கும். இதில் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. டிரான்ஸ் கொழுப்புகளை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இது இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. முடிந்தவரை முதல் தர ரஸ்குகளை குறைவாக எப்போவாவது சாப்பிடலாம்

4 / 5

இதில் உள்ள அதிக அளவு சர்க்கரை மற்றும் மைதாவை உட்கொள்வதால் எடை அதிகரிப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதனால்தான் தேநீருடன் ரஸ்க் சாப்பிடுவதை விட ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

5 / 5

மாறாக வறுத்த மக்கானா, வறுத்த வேர்க்கடலையை டீயுடன் சேர்த்து சாப்பிடலாம். அவை சத்தானவை மட்டுமல்ல, எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இந்த தின்பண்டங்கள் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ