ரஷ்ய- உக்ரைன் போருக்கு மத்தியில் டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிளின் மதிப்பு கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் சரிந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணுசக்தி கோட்பாட்டை அங்கீகரிக்கும் ஆணையில் செவ்வாய்க்கிழமை (நவ.19, 2024) கையெழுத்திட்டார்.
இந்நிலையில், 1 டாலருக்கு எதிரான ரஷ்ய ரூபிள் 0.82% சரிந்து 100.5 ஆக காணப்பட்டது. இது, இந்த ஆண்டின் மிகக் குறைவாக பார்க்கப்படுகிறது.
தற்போது 1 ரஷ்ய ரூபிளுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.84 ஆக காணப்படுகிறது.