5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: நாகை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் நவம்பர் 25 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Nov 2024 07:52 AM
கனமழை காரணமாக இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6
இதனிடையே இன்று (நவம்பர் 19) தமிழ்நாட்டில் திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

2 / 6
நடப்பாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் நவம்பர் 18 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மொத்தமாக 303 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 4 சதவிகிதம் அதிகமாகும்.

3 / 6
அதேசமயம் இன்றைய நாள் சென்னையை பொறுத்த வரை  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய இலேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

4 / 6
ஆனால் நவம்பர் 25 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

5 / 6
அதுமட்டமல்லாமல் நவம்பர் 27 ஆம் தேதி வரை அதிகாலையில் இயல்பை விட அதிகமான பனிப்பொழிவு இருக்கும் என்றும், வடமாவட்டங்களில் இது அதிகமாக காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

6 / 6
Latest Stories