School Leave: நாகை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா? - Tamil News | school holiday declared in karaikkal and Nagapattinam due to heavy rain | TV9 Tamil

School Leave: நாகை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Updated On: 

19 Nov 2024 07:52 AM

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் நவம்பர் 25 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6கனமழை

கனமழை காரணமாக இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6

இதனிடையே இன்று (நவம்பர் 19) தமிழ்நாட்டில் திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

3 / 6

நடப்பாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் நவம்பர் 18 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மொத்தமாக 303 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 4 சதவிகிதம் அதிகமாகும்.

4 / 6

அதேசமயம் இன்றைய நாள் சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய இலேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

5 / 6

ஆனால் நவம்பர் 25 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

6 / 6

அதுமட்டமல்லாமல் நவம்பர் 27 ஆம் தேதி வரை அதிகாலையில் இயல்பை விட அதிகமான பனிப்பொழிவு இருக்கும் என்றும், வடமாவட்டங்களில் இது அதிகமாக காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை..!
ஆஸ்திரேலியாவில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியர்..!