School Holiday: தென்காசியில் நாளை பள்ளிகள் விடுமுறை.. திடீர் அறிவிப்பால் மாணவர்கள் குஷி! - Tamil News | school leave declared in tenkasi district on november 23 due to voter id special camp | TV9 Tamil

School Holiday: தென்காசியில் நாளை பள்ளிகள் விடுமுறை.. திடீர் அறிவிப்பால் மாணவர்கள் குஷி!

Updated On: 

22 Nov 2024 20:45 PM

Tenkasi District: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு சூழலுக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்று பணி நாளாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

1 / 6தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை (23.11.2024) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

2 / 6

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் தொடர்மழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்படியான நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதும் நடந்து வருகிறது.

3 / 6

அதன்படி கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை விடுவதாக அறிவித்திருந்தது. அதேசமயம் மாற்று பணி நாளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

4 / 6

அதன்படி கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை விடுவதாக அறிவித்திருந்தது. அதேசமயம் மாற்று பணி நாளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

5 / 6

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

6 / 6

இதன் காரணமாக இந்த முகாம்கள் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறுவதால் தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி பணிநாளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!