Health Tips: சாக்ஸ் இல்லாமல் ஷூ அணியும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படும்..! - Tamil News | Shoes wearing without socks causes some health issues; health tips in tamil | TV9 Tamil

Health Tips: சாக்ஸ் இல்லாமல் ஷூ அணியும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படும்..!

Published: 

25 Oct 2024 20:15 PM

Wear Shoes: வெறும் கால்களில் ஷூ அணிவதால் பாதங்களில் காயம் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க ஷூக்களை அணியும்போது சாக்ஸ் பயன்படுத்துங்கள். குளிர்காலத்தில் காலுறைகளை அணிவது குளிரில் இருந்து விடுபடுவதுடன் உங்கள் பாதங்களை சூடாக வைத்திருக்கவும் உதவி செய்யும்.

1 / 6சாக்ஸ்

சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிபவர்களின் எண்ணிக்கை தற்போது இளைஞர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவது கால்களுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.

2 / 6

உடலில் வியர்வை அதிகம் சுரக்கும் பாகங்களில் பாதங்களும் ஒன்று. ஷூக்கள் அணியும்போது பாதங்களில் அதிகமாக வியர்க்க தொடங்கும். இதனால் துர்நாற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, பாதங்கள் தொடர்பான பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

3 / 6

சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிபவர்களுக்கு ரிங்வோர்ம் என்ற கால் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்புண்டு. சிலருக்கு பிறந்தது முதலே உணர்திறன் வாய்ந்த சருமம் இருக்கும். இந்த சருமம் உள்ளவர்கள் சாக்ஸ் இல்லாமல் ஷூ பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

4 / 6

பாதங்களில் அதிக வியர்வை ஏற்பட்டு, சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது கால்களில் பூஞ்சை தொற்றுக்கு காரணமாகும். கால்களில் சாக்ஸ் அணிந்தால் வியர்வை உறிஞ்சி, தொற்றுநோயை தடுக்கும்.

5 / 6

வெறும் கால்களில் ஷூ அணிவதால் பாதங்களில் காயம் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க ஷூக்களை அணியும்போது சாக்ஸ் பயன்படுத்துங்கள். குளிர்காலத்தில் காலுறைகளை அணிவது குளிரில் இருந்து விடுபடுவதுடன் உங்கள் பாதங்களை சூடாக வைத்திருக்கவும் உதவி செய்யும்.

6 / 6

சாக்ஸ் பாதங்களுக்கும் ஷூக்களுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. நீண்ட நேரம் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிந்து நடப்பது அல்லது ஓடுவது பாதங்களில் கொப்புளங்களை உண்டாக்கும்.

வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி - பிளிப்கார்ட் அதிரடி!
நீல நிற புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்
பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!