5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amaran OTT Release: சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் அமரன். உலகநாயகன் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சோனி பிச்சர்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 31ம் தேதி வெகு பிரம்மாண்டமாக வெளியாகியது. திரையரங்குகளில் அதிக கலெக்ஷ்ணை குவித்துவரும் இத்திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் இருந்துவரும் நிலையில் அதற்கான தகவல்கள் வெளியாகிவருகிறது.

barath-murugan
Barath Murugan | Published: 09 Nov 2024 12:01 PM
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ள மிகப் பிரம்மாண்டமான திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் ஹீரோவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதைவிட நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திரத்திற்கு  அந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பைப்  பெற்றார்.

1 / 6
ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிச்சர்ஸ் இரு நிறுவனங்களும் இணைந்துத் தயாரித்த இப்படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி உலகமெங்கும் வெளியாகியது.

2 / 6
காதல், எமோஷன் மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் வெளியான அமரன் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த வரதராஜனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தமிழ் சினிமாவை மட்டும் அடிப்படையாக வைத்து உருவாக்கிய இந்த அமரன் திரைப்படம் பின் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகியது

3 / 6
தெலுங்கில் வெளியான இந்த திரைப்படம் நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தின் வசூலை மிஞ்சியுள்ளதாகவும், அடுத்து மலையாளத்தில் நடிகர் அஜித்தின்  மங்காத்தா திரைப்படத்தின் வசூலை முறியடித்ததாகவும் கூறப்படுகிறது மற்றும் இந்த திரைப்படம் மலேசியாவில் சுமார் 2.1 மில்லயன் USD வசூல் செய்துள்ளதாம். தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை முறியடித்துவரும் நிலையில் அமரன் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

4 / 6
தற்போது இந்த திரைப்படம் வெளியாகிய 9 நாட்கள் முடிந்த நிலையில்  உலகளாவிய வசூலில் அமரன் திரைப்படம் சுமார் 194 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவின் கங்குவா வருகின்ற நவம்பர் 14ம் தேதி வெளியாக இருப்பதால் இத்திரைப்படம் சீக்கிரமாக ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் இருந்துவரும் நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் தகவல் வெளியாகிவருகிறது.

5 / 6
தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், அமரன் வரும் டிசம்பர் 1ல் வாரம் அல்லது 2வது  வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் உடன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர்  திரைப்படமும் ஒன்றாக வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

6 / 6
Latest Stories