மத்தாப்பு, சங்கு சக்கரம், சாட்டை வாயில் போன்ற வழக்கமான பட்டாசுகளும் கிடைக்கும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியில் வகைப்படுத்தப்பட்ட பட்டாசு அடங்கிய பரிசு பெட்டிகள் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. இதன் விலை ரூ.350 தொடங்கி ரூ.3000 வரை விற்கப்படுகிறது. அதேசமயம் இந்த ஆண்டு ரூ.6,000 கோடி வரை விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.