Sivakasi Crackers: சிவகாசி பட்டாசு விற்பனை.. ரூ.6000 கோடிக்கு இலக்கு! - Tamil News | Sivakasi firecracker industries eyes rs 6000 crore sales on this Diwali details in Tamil | TV9 Tamil

Sivakasi Crackers: சிவகாசி பட்டாசு விற்பனை.. ரூ.6000 கோடிக்கு இலக்கு!

Updated On: 

30 Oct 2024 17:20 PM

Sivakasi Crackers Sale: இந்தியாவின் பட்டாசு தலைநகரம் என்று அழைக்கப்படும் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பல சகாப்தங்களாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.‌ இந்த நிலையில் இந்த ஆண்டு சிவகாசியில் மொத்தம் ரூ.6000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 / 5அக்டோபர்

அக்டோபர் 31 ஆம் தேதியான நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வியாபாரம் உச்சத்தை எட்டியுள்ளது. ஆயுத பூஜை முதல் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வியாபாரிகள் ஏற்கனவே வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பட்டாசுகளை அனுப்ப தொடங்கியிருந்தனர்.

2 / 5

புதிய ரக பட்டாசுகளின் அறிமுகம் மற்றும் பட்டாசுகளின் தேவை அதிகரித்து வரும் காரணங்களால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு விற்பனையில் நம்பிக்கையுடன் உள்ளனர். பட்டாசுகளின் விற்பனை விலை மற்றும் தள்ளுபடி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடுகிறது. முன்னணி பட்டாசு ஆலைகளிலிருந்து விற்பனைக்கு வரும் பட்டாசுகளின்‌‌ விலை 3 - 5% கூடுதலாக இருக்கும்.

3 / 5

சிவகாசியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளிலிருந்து வானவேடிக்கை, பேன்சி வகை பட்டாசுகள், கார்ட்டூன் வடிவ பட்டாசுகள் உட்பட 400க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.‌ அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த புதுமையான பட்டாசுகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வியாபாரிகளை கவர்ந்து இந்தியாவின் 90% பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பட்டாசுகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விற்பனையாகி வருகிறது.

4 / 5

புதிய ரகங்களில் 240 ஷாட்கள் வரை வெடிக்கும் வானவேடிக்கைகள், 200 அடி உயரத்தில் 6 வண்ணங்களில் வெடிக்கும் ஃபேஷன் ஷோ, 250 அடி உயரம் உயர்ந்து பயங்கரமாக வெடிக்கும் ஷோட்டா ஃபேன்சி பட்டாசுகள் ஆகியவை இதில் அடங்கும். மற்ற பிரபலமான வகைகளில் கிளாசிக் கிட்டார் பட்டாசுகள் உள்ளது. இது 12 வண்ணங்களில் 12 முறை வெடிக்கும்.

5 / 5

மத்தாப்பு, சங்கு சக்கரம், சாட்டை போன்ற வழக்கமான பட்டாசுகளும் கிடைக்கும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியில் வகைப்படுத்தப்பட்ட பட்டாசு அடங்கிய பரிசு பெட்டிகள் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. இதன் விலை ரூ.350 தொடங்கி ரூ.3000 வரை விற்கப்படுகிறது. அதேசமயம் இந்த ஆண்டு ரூ.6,000 கோடி வரை விற்பனை செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா? இதை பண்ணுங்க
குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க
படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?