ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% வரை வட்டி: இந்த வங்கிகளை செக் பண்ணுங்க! | Small banks offering interest rates above 8 percent on fixed deposits Tamil news - Tamil TV9

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% வரை வட்டி: இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!

Published: 

20 Nov 2024 14:01 PM

fixed deposits: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்கும் வங்கிகளின் லிஸ்ட் இங்குள்ளன. ஈக்விட்டி உள்ளிட்ட மற்ற வகை முதலீடுகளுடன் ஒப்பிடும்போது எஃப்.டி பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

1 / 8முதலீட்டாளர்களின்

முதலீட்டாளர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கும் முதலீடு என்பது வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு ஆகும். எஃப்.டி-யில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் பாதுகாப்பு மற்றும் முதலீட்டின் மீதான வருமானத்தின் உறுதி.

2 / 8

ஃபிக்ஸட் டெபாசிட் பல்வேறு காலங்களை அடிப்படையாக காணப்பட்டது. இதில் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீட்டை செய்யலாம்.

3 / 8

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல் இங்குள்ளன.

4 / 8

ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1 முதல் 2 ஆண்டுகள் எஃப்.டிக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இதே காலகட்டத்திலானது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

5 / 8

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் மற்றும் உத்கர்ஹ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் முறையே 1-2 ஆண்டுகால எஃப்.டி-க்கு 8.25 மற்றும் 8.50 சதவீதம் வரை வட்டிகள் வழங்குகின்றன.

6 / 8

ஈ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி முறையே 8.25 மற்றும் 8.50 சதவீதம் வட்டியை வழங்குகின்றன.

7 / 8

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை பொறுத்தமட்டில் 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

8 / 8

இந்தத் தகவல்கள் வங்கி இணையதளத்தில் நவ.15, 2024ல் தொகுத்து வழங்கப்பட்டவை ஆகும். இந்த வட்டி விகிதங்கள் ரூ.1 கோடி வரையிலான முதலீடுகளுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!