Smartphones: உலகில் அதிகம் விற்பனையான 10 ஸ்மார்ட்போன்கள் இவைதான்! - Tamil News | Smartphones these are the best selling phones in the world Samsung and Apple smartphones on top details in Tamil | TV9 Tamil

Smartphones: உலகில் அதிகம் விற்பனையான 10 ஸ்மார்ட்போன்கள் இவைதான்!

Published: 

13 Nov 2024 08:30 AM

Highest Sale Smartphones: ஸ்மார்ட் போன் தற்பொழுது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபரே இல்லை என்ற அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன. ஆனால் வெளியிடப்படும் அனைத்து ஃபோன்களும் மக்களுக்கு பிடித்ததாக இருப்பதில்லை. அதிகம் விற்பனையாகும் முதல் 10 ஸ்மார்ட்போன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 52024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறைய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் சில போன்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. சில ஸ்மார்ட்போன்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படவில்லை. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Counterpoint சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மூன்றாம் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் போன்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது.

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறைய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் சில போன்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. சில ஸ்மார்ட்போன்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படவில்லை. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Counterpoint சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மூன்றாம் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் போன்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது.

2 / 5

இந்த பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. Counterpoint அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மீண்டும் உலகில் அதிகம் விற்பனையாகும் போனாக மாறியுள்ளது. மக்கள் ஐபோன் 15 தொடரை மிகவும் விரும்பியுள்ளனர். இது தவிர, ப்ரோ மாடல்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy S24 மாடலும் நன்றாக விற்பனையாகியுள்ளது.

3 / 5

Counterpoint research அறிக்கையின் படி சிறந்த முறையில் விற்பனையாகும் முதல் 10 போன்களில் ஆப்பிள் மூன்று இடங்களை பிடித்துள்ளது. அதில் ஐபோன் ப்ரோ மாடல்களே அதிகம் விற்பனையாகியுள்ளது.

4 / 5

iPhone 15, iPhone 15 Pro Max, iPhone 15 Pro, Galaxy A15 4G, Galaxy A15 5G, Galaxy A35 5G, Galaxy A05 ,iPhone 14, Redmi 13C 4G,Galaxy S24 ஆகிய மாடல் ஃபோன்கள் முதல் பத்து இடத்தை பிடித்துள்ளது.

5 / 5

சாம்சங் இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் வரவில்லை என்றாலும், 10ல் 6 போன்கள் அதைச் சேர்ந்தவை. Samsung Galaxy A15 4G போன் மூன்றாவது அதிகம் விற்பனையாகும் போன் ஆகும். அதே நேரத்தில் நான்காவது இடத்தில் A15 5G மாடல் உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 போன் அதிகம் விற்பனையாகும் போன்களின் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
செலரி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!