Snoring: இரவில் குறட்டை விடுகிறீர்களா? இதை செய்து நல்ல பலனை பெறுங்கள்..! - Tamil News | snore problem: home remedies to get relief from snore problem in tamil | TV9 Tamil

Snoring: இரவில் குறட்டை விடுகிறீர்களா? இதை செய்து நல்ல பலனை பெறுங்கள்..!

Published: 

15 Oct 2024 23:50 PM

Health Tips: இரவில் குறட்டை விடுவது ஒரு பொதுவான பிரச்சனை. இந்த பிரச்சனை ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கும் பெரிய தொந்தரவை தரும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பல மாற்றங்களை செய்து குறட்டை பிரச்சனையை சரி செய்யலாம். மேலும், வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை கொண்டு குறட்டை பிரச்சனையை நீங்கள் போக்கலாம்.

1 / 6இரவில்

இரவில் குறட்டை விடுவது ஒரு பொதுவான பிரச்சனை. இந்த பிரச்சனை ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கும் பெரிய தொந்தரவை தரும். இத்தகைய சூழ்நிலையில், குறட்டை பிரச்சனையை நீக்க, மக்கள் நிறைய முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

2 / 6

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பல மாற்றங்களை செய்து குறட்டை பிரச்சனையை சரி செய்யலாம். மேலும், வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை கொண்டு குறட்டை பிரச்சனையை நீங்கள் போக்கலாம்.

3 / 6

குறட்டையை குறைக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் சில புதினா இலைகளை கொதிக்க வைத்து, அது ஆறிய பிறகு அந்த நீரை குடிக்கவும். இது உங்களுக்கு விரைவில் நல்ல தீர்வை தரும்.

4 / 6

குறட்டை பிரச்சனையை போக்க வீட்டில் இருக்கும் இலவங்கப்பட்டை பொடியையும் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது உங்களுக்கு சிறந்த பலனை தரும்.

5 / 6

ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், குறட்டை பிரச்சனையை குறைக்கவும் உதவுகிறது. இதற்கு இரவில் தூங்கும் முன் சில துளிகள் ஆலிவ் ஆயிலை மூக்கில் விடவும்.

6 / 6

இரவில் தூங்கும் முன், ஒரு பல் பூண்டை வறுத்து, வெதுவெதுப்பான நீருடன் எடுத்துக்கொள்ளவும். பூண்டு இயற்கையில் சூடான ஒரு உணவு பொருள். இதை அதிகமாக எடுத்துக்கொள்வது உடல் சூட்டை அதிகரிக்க செய்யும்.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!