5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Delhi Ganesh: விமானப்படை வேலை வேண்டாம்… நடிப்புதான் வேணும் – டெல்லி கணேஷ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் கமல் ஹாசனின் ‘பசி’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு டெல்லி கணேஷிற்கு அளிக்கப்பட்டது. மேலும் கடந்த 1994-ம் ஆண்டு தமிழக அரசால் கலைமாமணி விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இவரது நடிப்பில் முன்னதாக வெளியான பல படங்களின் வசனங்கள் தற்போது இணையத்தில் மீம்ஸ்களாக வலம் வருகிறது. அதில் சூர்யாவுடன் ‘அயன்’ படத்தில் நடித்த இவர் கூறும் ‘பையன் புடுச்சுட்டான்’ என்ற வசனம் தற்போது உள்ள இளைய தலைமுறைக்கு நன்கு பரிச்சையமான் ஒன்று ஆகும்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2024 15:22 PM
தூத்துக்குடியில் 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தவர்தான் நடிகர் டெல்லி கணேஷ். டெல்லியில் விமானப்படையில் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். இதன் காரணமாகவே இவருக்கு ‘டெல்லி கணேஷ்’ என்ற பெயர் வந்துள்ளது. டெல்லி கணேஷ் தக்‌ஷின பாரத நாடக சபா என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். 

1 / 8
நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் ஒரு பொய், தீர்ப்பு, நடிகர் 'சோ'வின் மனம் ஒரு குரங்கு,  போன்ற பிற நாடகக் குழுக்களின் நாடகங்களையும் வாங்கி, அதிலும் நடித்து அரங்கேற்றம் செய்தும் வந்தார் டெல்லி கணேஷ்.

2 / 8
இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக வேலையை விட்டுவிட்டு நடிப்பு துறைக்கு வந்தார். நாடக நடிகராக தனது நடிப்பைப் தொடங்கிய நடிகர் டெல்லி கணேஷ் காமெடி, வில்லன், குணசித்திரம் என சினிமாவில் கலக்கியுள்ளார்.

3 / 8
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக திகழும் கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். சுமார் 400 படங்களுக்கு மேல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

4 / 8
குறிப்பாக டெல்லி கணேஷ் நடிகர் கமல் ஹாசனுடன் அதிகப் படங்களில் நடித்துள்ளார். நாயகன், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அபூர்வ சகோதரர்கள், ஔவை சண்முகி, பாபநாசம் என பல படங்களில் கமலுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடதக்கது.

5 / 8
இவரது நடிப்பில் முன்னதாக வெளியான பல படங்களின் வசனங்கள் தற்போது இணையத்தில் மீம்ஸ்களாக வலம் வருகிறது. அதில் சூர்யாவுடன் ‘அயன்’ படத்தில் நடித்த இவர் கூறும் ‘பையன் புடுச்சுட்டான்’ என்ற வசனம் தற்போது உள்ள இளைய தலைமுறைக்கு நன்கு பரிச்சையமான் ஒன்று ஆகும்.

6 / 8
நடிகர் கமல் ஹாசனின் ‘பசி’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு டெல்லி கணேஷிற்கு அளிக்கப்பட்டது. மேலும் கடந்த 1994-ம் ஆண்டு தமிழக அரசால் கலைமாமணி விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

7 / 8
வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரை, குறும்படம் ஆகியவற்றிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் டெல்லி கணேஷ். இறுதியாக கமலின் இந்தியன் 2 படத்தில் தனது நடிப்பை வெளிப்படித்தினார் டெல்லி கணேஷ்.

8 / 8
Latest Stories