5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இயக்குநர் ஷங்கர் பிரமாண்ட இயக்குநர் ஆனது எப்படி? சில சுவாரஸ்ய தகவல்கள்

HBD Director Shankar: இயக்குநராக ஹிட் படங்களை தந்த ஷங்கர், தயாரிப்பாளராகவும் தரமான படங்களை உருவாக்கியுள்ளார். தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில், காதல் என இந்த லிஸ்டில் சொல்லிக்கொண்டே போகலாம். 90 காலகட்டத்திலேயே தனது படங்கள் மூலம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநராக திகழ்ந்து வரும் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2024 11:06 AM
சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் திரைத்துறைக்கு வந்து தற்போது தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர் ஆக உருவெடுத்து இருப்பவர் இயக்குநர் ஷங்கர்.

1 / 8
1986ல் நடந்த பூவும் புயலும் படத்தில் சிறு வேடத்தில் தோன்றினார். மேலும் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கான முயற்சி பெரிய அளவில் கைக்கொடுக்காததால் இயக்குநராக முயற்சித்த ஷங்கர் அதில் வெற்றியும் கண்டார்.

2 / 8
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் ஷங்கர். கிட்டத்தட்ட எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஷங்கர் 17 படங்கள் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கின்றார். 

3 / 8
1993-ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். இந்தப் படத்தை தயாரிப்பாளர் குஞ்சுமோன் தயாரித்துள்ளார்.

4 / 8
முதல் படமான ஜென்டில்மேன் பிரம்மாண்டமான தயாரிப்பு என்பதால், தொடர்ச்சியாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களையே அவர் இயக்கினார். இதனாலேயே பலரும் அவரை 'பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்' என்றே அழைத்தார்கள்.

5 / 8
'காதலன்', 'இந்தியன்', 'ஜீன்ஸ்', 'முதல்வன்', 'பாய்ஸ்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', 'நண்பன்', 'ஐ', '2.0' ஆகிய ஹிட் படங்களை இயக்கிய ஷங்கர் தற்போது கமல் நடிப்பில் 'இந்தியன் 2' படத்தை இயக்கியிருந்தார். 

6 / 8
இயக்குநராக ஹிட் படங்களை தந்த ஷங்கர், தயாரிப்பாளராகவும் தரமான படங்களை உருவாக்கியுள்ளார். தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில், காதல் என இந்த லிஸ்டில் சொல்லிக்கொண்டே போகலாம்.

7 / 8
90 காலகட்டத்திலேயே தனது படங்கள் மூலம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநராக திகழ்ந்து வரும் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

8 / 8
Latest Stories