கல்லூரி படிப்பில் பெரிய மாற்றம்.. 2 ஆண்டிலே பட்டப்படிப்பை முடிக்கலாம்.. யுஜிசி முக்கிய தகவல்! - Tamil News | students can finish ug degree early from next academic year says ugc chairman | TV9 Tamil

கல்லூரி படிப்பில் பெரிய மாற்றம்.. 2 ஆண்டிலே பட்டப்படிப்பை முடிக்கலாம்.. யுஜிசி முக்கிய தகவல்!

Updated On: 

15 Nov 2024 19:58 PM

UG Degree : அடுத்த கல்வியாண்டு முதல் இளங்கலை பட்டப்படிப்பை இனி 2 முதல் இரண்டரை ஆண்டில் முடிக்கலாம் என்று யு.ஜி.சி தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், படிப்பில் பின்தங்கிய சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் மேலும் 6 மாதமோ அல்லது ஓராண்டு காலமோ கூடுதலாக இளங்கை பட்டப்படிப்பை முடிக்க எடுக்க கொள்ளலாம் என்றார்.

1 / 5அடுத்த

அடுத்த கல்வியாண்டு முதல் இளங்கலை பட்டப்படிப்பை இனி 2 முதல் இரண்டரை ஆண்டில் முடிக்கலாம் என்று யு.ஜி.சி தலைவர் தெரிவித்துள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்பின் காலம் மூன்று ஆண்டாக உள்ளது. இவற்றில் 6 செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகள் வரை உள்ளன. பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகள் 4 ஆண்டுகள் வரை உள்ளன.

2 / 5

இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் இந்த பட்டப்படிப்பை முன்கூட்டியே முடிக்கும் முறை நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தான் சென்னை கிண்டில் நேற்று புதிய தேசியக் கல்விக் கொள்கைகையை நடைமுறைப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் கருத்தரங்கள் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டார்.

3 / 5

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி இளங்கலை படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறைக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தி புதிய விதிமுறையின்படி, மாணவர்கள் விரும்பினால் 4 அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு முன்னரோ அல்லது 6 மாதங்களுக்கு முன்னரோ படிபபை முடித்து விடலாம்” என்று தெரிவித்துள்ளார்.

4 / 5

மேலும், "படிப்பில் பின்தங்கிய சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் மேலும் 6 மாதமோ அல்லது ஓராண்டு காலமோ கூடுதலாக இளங்கை பட்டப்படிப்பை முடிக்க எடுக்க கொள்ளலாம். இந்த புதிய முறை அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்" என்று கூறியுள்ளார். ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் யுஜிசி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5

மேலும், அவர் பேசுகையில், "உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலாம் ஒரு தடையாக இருந்து வருகிறது. ஆகவே அவர்களுக்கு தாய்மொழியில் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். உலகில் முன்னேற்றிய நாடுகள் எல்லாம் தாய்மொழியில் தான் கல்வி வழங்கி வருகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் வகையில் பிரதமரின் கல்விக்கடன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார்.

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?