5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா – ஜோதிகா

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 350 கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்செலவில் உருவான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டவே திணறியது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Nov 2024 10:46 AM
சூர்யா நடிப்பில் கங்குவா படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

1 / 5
நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர். சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார்.

2 / 5
படிப்பை முடித்துவிட்டு நடிப்பு துறைக்கு வருவதற்கு முன் கார்மென்ஸ் கம்பெனி ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார் நடிகர் சூர்யா. இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு  மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா. சினிமாவிற்கு வந்த முதல் 4 வருடங்களுக்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாமல் இருந்தார் சூர்யா.

3 / 5
சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம். இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். கடந்த 2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார் சூர்யா. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கஜினி, சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடதக்கது.

4 / 5
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 350 கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்செலவில் உருவான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டவே திணறியது. இந்த நிலையில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

5 / 5
Latest Stories