5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னைக்கு மிக கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

Chennai Rains : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Dec 2024 14:30 PM
வடகிழக்கு பருவமழை  இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.  வடகிழக்கு பருவமழை  தொடக்கத்தில் சரியான மழை பொழிவு இல்லை. ஆனால் நவம்பர் இறுதிப் பகுதியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது.  கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த  பெங்கல் என்ற புயலாக மாறியது.

1 / 10
இந்த ஃபெங்கல் புயல்  காரணமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்யதது. குறிப்பாக, வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நல்ல மழை பெய்தது. அதாவது, கடலூர், விழப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஃபெங்கல் புயல் புரட்டி எடுத்தது. இங்கு 50 செ.மீட்டருக்கு மேல் மழை கொட்டியது.

2 / 10
அதேபோல, புதுச்சேரியிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.  இந்த புயல் கடந்த சென்ற நிலையில்,  வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதுவும் தமிழக கடற்கரையை நோக்கி வந்தது. இதனால் தமிழகத்தில் மழை பெய்தது.

3 / 10
குறிப்பாக  நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  மேலும் குளங்களும் உடைந்தன.  இப்படிப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று  வானிலை மையம் தெரிவித்தது.

4 / 10
நேற்றே உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதம் ஆனது. இந்த நிலையல், இன்று காலை  வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக வானிலை மையம் தெரிவித்தது. தெற்கு வங்கக்கடலின் மத்திய  பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

5 / 10
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் வலுப்பெற்றக்கூடும் என்றும் மேலும், மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம்  தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

6 / 10
அதன்படி, நாளை தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு,  விழுப்புரம், கடலூர்,  மயிலாடுதுறை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்  கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

7 / 10
வரும் 18ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு,  திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்  கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

8 / 10
வரும் 19ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட் மாவட்டங்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல மழை பெய்தால் பல இடங்களில்  தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படலாம்.

9 / 10
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு எந்த அளவுக்கு வலுவாக இருக்கும் என்று தெரியவில்லை. மேலும், இது புயலாக மாறுமா என்ற தகவலையும் வானிலை மையம் தற்போது தெரிவிக்கவில்லை. இருப்பினும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 / 10
Latest Stories